இரத்தினபுரி தும்பர தோட்ட சம்பவம்; பத்தோடு பதினொன்றாகவே இருக்கப்போகின்றது...!

Published By: Vishnu

21 May, 2024 | 03:42 AM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

தோட்ட நிர்­வா­கத்­தி­னரால் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள் மிக மோச­மாக தாக்­கப்­பட்டு வரும் சம்­ப­வங்­க­ளுக்கு நிரந்­தர தீர்­வு­களைப் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாமல் தொழிற்­சங்­கங்­களும் மலை­யக அர­சியல் கட்­சி­களும் தடு­மாறி நிற்­கின்­றன. சம்­பவம் இடம்­பெற்ற பிறகு குறித்த இடத்­துக்குச் சென்று பாதிக்­கப்­பட்ட நபர்­க­ளிடம் வாக்­கு­மூலம் கேட்­பதும் அவர்கள் அடித்தால் திருப்பி அடி­யுங்கள் என்று கூறி விட்டு வருவதன் மூலம் தமது கட­மைகள் முடிந்து விடு­கின்­றன என மலை­யக அர­சி­யல்­வா­திகள் நினைக்­கின்­றனர்.

இரத்­தி­ன­புரி கிரி­யல்ல பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட தும்­பர தோட்­டத்தில் கடந்த 6 ஆம் திகதி இடம்­பெற்ற சம்­பவம் பார­தூ­ர­மா­ன­தாகும். பணிக்கு வர­வில்லை என்­ப­தற்­காக அத்­தோட்­டத்தின் தொழி­லாளர் தம்­ப­தியை தோட்ட முகா­மை­யா­ளரும் அவ­ரது உத­வி­யா­ளர்­களும் கீழே தள்ளி தாக்­கிய காணொலி பல­ருக்கும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இரு­பதாம் நூற்­றாண்­டிலும் கூட தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள் இவ்­வாறு கொத்­த­டி­மை­க­ளாக நடத்­தப்­ப­டு­கின்­றார்கள் என்­ப­தற்கு இதை விட ஒரு உதா­ரணம் தேவை­யில்லை.

மட்­டு­மின்றி தேயி­லையை உற்­பத்தி செய்யும் நாடு­களில் இலங்­கையில் மாத்­தி­ரமே தொழி­லா­ளர்கள் இவ்­வாறு நடத்­தப்­ப­டு­கின்­றார்கள் என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. சம்­பவம் இடம்­பெற்ற தும்­பர தோட்டம்  ஒரு தனியார் தோட்­ட­மாகும். துன்­கிந்த பிளாண்­டேஷன் லிமிட்டட் என்ற நிர்­வா­கத்தின் கீழ் இயங்கி வரு­கின்­றது.  இன்று கம்­பனி நிர்­வா­கத்தின் கீழ் உள்ள பெருந்­தோட்­டங்­க­ளி­லேயே தொழி­லா­ளர்கள் தாக்­கப்­ப­டு­வது வழ­மை­யா­ன­தொன்று. அவ்­வாறு இருக்­கையில் தொழிற்­சங்க, அர­சியல் செயற்­பா­டுகள் எது­வு­மின்றி தோட்ட நிர்­வா­கத்தின் அதி­கா­ரத்­துக்குள் மாத்­திரம் வாழ்ந்து வரும் தனியார் தோட்டத் தொழி­லா­ளர்­களின் நிலைமை அபா­ய­க­ர­மா­க­வுள்­ளது.

நடந்த சம்பவம் என்ன?

தும்­பர தனியார் தோட்­டத்தில் பணி­யாற்றி வரும் சுரேஷ்– கலைச்­செல்விகனகா  தம்­ப­தி­க­ளுக்கு இரண்டு வய­திலும் நான்கு வய­திலும் இரண்டு குழந்­தைகள் உள்­ளனர். தோட்டத்தில் வேலைநாட்கள் குறைவு என்பதால் பலரும் அருகிலுள்ள தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்வது வழமையானதொன்று.    இதை கார­ண­மா­கக்­கொண்டு. கடந்த 6 ஆம் திகதி இக்­கு­டும்பம் வசித்து வந்த குடி­யி­ருப்­புப்­ப­கு­திக்கு வருகை தந்த தோட்ட உதவி முகா­மை­யாளர் மற்றும் இரு உத­வி­யா­ளர்கள் கலைச்­செல்­வியின் கணவர் சுரேஷை  தாக்கியுள்ளனர். இதை கலைச்செல்வி தடுத்துள்ளார். இதையடுத்து உதவி முகா­மை­யா­ள­ர் அவரை கீழே தள்ளி தாக்கியதுடன் அத்­தோட்­டத்தைச் சேர்ந்த காவ­லாளி தடி ஒன்­றினால் கலைச்­செல்­வியை தாக்­கி­யுள்ளார். இதன் கார­ண­மாக அவ­ரது இடது கை கடுங்­கா­யங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளது.     சம்­பவம் இடம்­பெற்ற போது அப்­ப­கு­தியில் ஏனைய தொழி­லா­ளர்கள் ஒன்று கூடவே அவ்­வி­டத்­தி­லி­ருந்து குறித்த மூவரும் சென்­றுள்­ளனர்.

பொலி­ஸாரின் அலட்­சியம்

இதை­ய­டுத்து காயங்­க­ளுக்­குள்­ளான கலைச்­செல்வி   தனது கண­வ­ருடன்   கிரி­யல்ல பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்று முறைப்­பா­டொன்றை மேற்­கொண்­டுள்ளார். தனக்கு இவ்­வி­ட­யத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்றும் குறித்த நபர்­களை கைது செய்து அவர்­க­ளுக்கு  எதி­ராக வழக்கு தொட­ரும்­ப­டியும் கேட்­டுள்ளார். முறைப்­பாட்டை பெற்­றுக்­கொண்ட பொலி­ஸாரோ, இச்சம்பவம் குறித்து  நீதி­மன்றில் வழக்கு தொடர முடி­யாது என்றும் மத்­தி­யஸ்த சபைக்கே விசா­ர­ணைக்கு அனுப்­பலாம் என்றும் அலட்­சி­ய­மாக பதில் கூறி­யுள்­ளனர். அதை­ய­டுத்து அடி­பட்ட காயங்­க­ளுடன்  வேத­னையில் இருந்த  கலைச்­செல்வி ஹொரண  வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இதற்­கி­டையில் குறித்த சம்­ப­வத்தின் காணொலி சமூக ஊட­கங்­களில் பர­வி­யதில் பலர் தமது கடும்  எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

இச்­சந்­தர்ப்­பத்தில்  8 ஆம் திக­தி­யன்று ஹொரண வைத்­தி­ய­சா­லைக்குச் சென்ற  பொலிஸார் மற்றும் தோட்ட உதவி முகாமையாளர் ஆகியோர்   கலைச்செல்வியிடம்,    'சம்­ப­வத்தால் அதிக காயங்கள் இல்லை தானே , மரணம் சம்­ப­விக்­க­வில்­லையே என மிரட்டும் தொனியில் அவ­ரிடம் கூறி­ய­தோடு டிக்கட் வெட்டி வீட்­டுக்குச் செல்­லும்­படி கோரி­யுள்­ளனர். எனினும் அவ்­விடம் வந்த தாதியர் அவ்­வாறு செய்ய முடி­யாது என்று கூறவும் அவர்கள் அங்­கி­ருந்து சென்­றுள்­ளனர். எனினும் வைத்­தி­ய­சா­லைக்­குள்­ளேயே தனக்கு அச்­சு­றுத்­தல்கள் இருப்­பதை உணர்ந்த கலைச்­செல்வி  மறுநாள்  வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்ளார்.

கிரி­யல்ல பொலி­ஸாரும் இருவரையும் அழைத்து கதைத்துள்ளனர்.  9 ஆம் திக­தி­யன்றே  இரத்­தி­ன­புரி நீதவான் நீதி­மன்றில்   இருவரினதும்  முறைப்­பாடு குறித்த வழக்கை எடுத்­துள்­ளனர். எனினும் இவர் வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்­ததால் இவரை தாக்­கிய மூவரும் பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். அதற்கு தயா­ரா­கவே மேற்­படி நபர்கள் தமது சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் அங்கு வருகை தந்­தி­ருக்­கின்­றனர்.

அரசியல்வாதிகளின் பிரசன்னம்

இந்த சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து வழமை போன்று மலை­யக அர­சியல் கட்சி மற்றும் தொழிற்­சங்க பிர­மு­கர்கள் இரத்­தி­ன­புரி தும்­பர தோட்­டத்தை நோக்கி படை­யெ­டுத்­தனர். தமிழ் முற்­போக்குக் கூட்­டணித் தலைவர் மனோ கணேசன், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் சார்­பாக எம்.சக்­திவேல், தேசிய தோட்­டத்­தொ­ழி­லாளர் சங்­கத்தின் செய­லா­ளரும் எம்.பியு­மான வடிவேல் சுரேஷ் ஆகியோர் சம்­பவ இடத்­துக்குச் சென்று பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரையும் தோட்ட மக்­க­ளையும் சந்­தித்­துள்­ளனர்.  கடந்த 16 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை இரத்­தி­ன­புரி மணிக்­கூட்டு கோபு­ரத்­துக்கு அரு­கா­மையில் நடந்த சம்­ப­வத்தை கண்­டித்து ஒரு ஆர்ப்­பாட்­டமும் இடம்­பெற்­றது. ஒன்­றி­ணைந்த சிவில் சமூ­கத்­தினர் இதை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர்.

பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் வாக்குமூலம்

பொலிஸார் மற்றும் தோட்ட நிர்­வா­கத்­தி­னரின் செயற்­பாடுகள் தொடர்பில்  இரத்­தி­ன­புரி பிரதி பொலிஸ்மா அதி­ப­ருக்கு இது தொடர்பில் சிவில் அமைப்­பு­களும் அர­சியல் தொழிற்­சங்க பிர­தி­நி­தி­களும் தமது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். இது தொடர்பில் சட்­டத்­த­ரணி விஜ­ய­குமார் சுகு­மாரன் கூறு­கையில், குறித்த சம்­ப­வத்தின் போது அக்­கு­டி­யி­ருப்பை சேர்ந்த யாரா­வது ஒரு தொழி­லா­ளியோ அல்­லது பெண்ணின் கண­வரோ தோட்ட முகா­மைா­ய­ளரை திருப்பி தாக்­கி­யி­ருந்தால் அது இனக்­க­ல­வ­ர­மாக வெடிப்­ப­தற்கு சந்­தர்ப்­பங்கள் உள்­ளன. இரத்­தி­ன­புரி மாவட்ட தோட்­டப்­ப­கு­தி­களில் கடந்த காலங்­களில் இடம்­பெற்ற இவ்­வா­றான சம்­ப­வங்­க­ளுக்கு இன­வாத சாயம் பூசப்­பட்டு உண்­மை­யான கார­ணங்கள் மறைக்­கப்­பட்­டன. எனவே இது தொடர்பில் உடன் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு   பிரதி பொலிஸ்மா அதி­ப­ரிடம் கோரிக்கை விடுத்­த­தாகத் தெரி­வித்தார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை 16 ஆம் திகதி சுரேஷ்– கலைச்­செல்வி இரு­வரும் இரத்­தி­ன­புரி பிரதி பொலிஸ்மா அதிபர் காரி­யா­ல­யத்தில் தமது வாக்­கு­மூ­லத்தை மீண்டும் பதிவு செய்தனர். இதன் போது   வைத்தியசாலைக்கு வந்து தன்னை மிரட்டியவர்கள் தொடர்பிலும்  கலைச்செல்வி பதிவு செய்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்று இல்லாத காரணத்தினால் மாத்திரம் இவ்வாறு தொழிலாளர்களுக்கு எதிராக அட்டூழியங்கள் இடம்பெறுகின்றன என்று கூற முடியாது. ஏனென்றால் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இருக்கும் பிரதேசங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

எங்கள் பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்தால் மாத்திரமே உங்கள் பிரதேசத்தில் நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்பது இயலாமை மற்றும் அரசியல் வங்குரோத்து நிலையின் வெளிப்பாடாகும். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் ஏனைய பிரதேச தமிழ் எம்.பிக்கள் இவ்விடயத்தில் தொடர்ந்தும் மெளனமாகவே இருக்கின்றனர்.

இரத்தினபுரி மாவட்டத்தின் பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களின் எல்லைப்பகுதிகளாக சிங்கள கிராமங்கள் விளங்குகின்றன. இவ்வாறான தோட்டங்களில் தொழிலாளர்கள் நிம்மதியான வாழ்க்கையை உறுதிப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.  இனவாத கும்பல்களின் தாக்குதல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பல சந்தர்ப்பங்களில் இரத்தினபுரி மாவட்ட தோட்டத்தொழிலாளர்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் காவத்தை பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் உள்ள வெள்ளந்துர தோட்டத்தில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இதே பாணியில் தோட்ட முகாமையாளர் தொழிலாளர் குடும்பம் ஒன்று தற்காலிகமாக அமைத்த குடியிருப்பை உடைத்து சேதமாக்கிய சம்பவம் இடம்பெற்றதை மறக்க முடியாது.

அரசியல் பலம் இருந்தால் ஒன்றும் நடக்காது என்று சிலர் கூறுகின்றனர். 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி ஒரு அரசியல் பிரதிநிதியின் வீட்டுக்கு முன்பாகவே இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றதை பலர் ஞாபகம் வைத்திருக்கின்றார்களோ தெரியாது.

காவத்தை பொரோனுவ தோட்ட கீழ்ப்பிரிவில் வசித்து வரும் பெல்மதுள்ளை பிரதேச சபையின் உறுப்பினராக விளங்கிய ராகவன் என்பவருடைய வீட்டுத்தோட்டத்தில் இருந்த மூன்று தென்னை மரங்களும் ஒரு ஈரப்பலா மரமும் தோட்ட உதவி முகாமையாளரினால் வெட்டி தறிக்கப்பட்டது. இது குறித்து கேள்வியெழுப்பிய தோட்ட இளைஞர்கள்,  கள உத்தியோகத்தரிடம் தர்க்கம் புரிய குறித்த தோட்ட முகாமையாளர் இளைஞர்களுக்கு  எதிராக காவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கின்றார். பின்பு அவ்விடம் வந்த பொலிஸ் பொறுப்பதிகாரியும் நடந்த சம்பவத்தை விசாரிக்காது தோட்ட இளைஞர்கள் சிலரை கைது செய்துள்ளார்.

அவர்கள் மறுநாள் பெல்மதுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஒரு குற்றமும் செய்யாத தமது தோட்ட இளைஞர்களுக்கு இடம்பெற்ற அநீதியை எதிர்த்து தோட்ட இளைஞர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட வேளை அயலிலுள்ள கிராமங்களிலிருந்து சிங்கள இளைஞர்களை அழைத்து வந்து தோட்ட மக்களை அச்சுறுத்தி பணிக்கு செல்லும்படி செய்தது தோட்ட நிர்வாகம்.

தமது உரிமைகள் பறிக்கப்படும் போது கேள்வியெழுப்பினால் அதை இனவாத சம்பவமாக காட்ட முயலும் இவ்வாறான சம்பவங்களை, குறித்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள அமைச்சர்கள், எம்.பிக்களும் கண்டு கொள்வதில்லை.அது குறித்து பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகளும் அவர்களிடம் கேள்வியெழுப்புவதில்லை. எல்லா வகையிலும் இரத்தினபுரி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் அநாதரவாக்கப்பட்டுள்ளனர் என்றே கூற வேண்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காயமடைந்த புலிகளுக்கு மருத்துவ உதவி வழங்கிய...

2024-06-23 18:27:21
news-image

தொழிலாளர்களின் நாட்சம்பளம் எவ்வளவாக இருத்தல் வேண்டும்?

2024-06-23 12:56:32
news-image

நீதித்துறையின் மீதான நிறைவேற்றுத்துறையின் பாய்ச்சல்

2024-06-23 10:42:42
news-image

ஜீவனுக்கு எதிரான முதலாளிமார் சம்மேளனத்தின் போர்க்கொடி 

2024-06-23 10:36:16
news-image

பாத யாத்திரை பாரம்பரியத்தை பேணுவது போல்...

2024-06-23 09:54:12
news-image

Factum Perspective: அனைத்து ஜனாதிபதியின் நபர்கள்...

2024-06-22 13:44:21
news-image

முறைமை மாற்றத்துக்காக வருகின்ற வாய்ப்புக்கள்

2024-06-19 16:07:11
news-image

அணுவாயுதங்களுக்கான செலவிடுதலை அதிகரிக்கும் நாடுகள் !

2024-06-18 16:20:51
news-image

13ஆவது திருத்தத்தில் அரசியல் பந்தாட்டம் ;...

2024-06-18 11:40:13
news-image

Factum Perspective: இலங்கையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்...

2024-06-17 15:40:00
news-image

சமூகமயமாக்கலில் பிரத்தியேக வகுப்புக்களின் திசை திரும்பலும்...

2024-06-17 13:19:42
news-image

பல்திறப்புலமையும் பன்முக ஆற்றலும் கொண்ட ஆளுமை...

2024-06-16 21:16:51