இராணுவத்திடம் குடும்பமாக சரணடைந்தவர்களின் குழந்தைகளிற்கு என்ன நடந்தது? சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் கேள்வி?

Published By: Rajeeban

20 May, 2024 | 08:27 PM
image

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே அவர்களிற்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த கேள்வியை எழுப்பினார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

எனது விஜயம் குறிப்பிடத்தக்கது ஏனென்றால் இலங்கையின் உள்நாட்டு போர் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற காலப்பகுதியில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

இந்த காலப்பகுதியில் பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமலாக்கப்பட்டனர் .

இந்த வருடம் இலங்கையில் நாடாளுமன்ற ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெறவுள்ளதால்  இந்த வருடம் இலங்கையின் தலைவிதியையும் மனித உரிமை பாதுகாப்பின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.

நான் ஏன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டேன்? 

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து  அறிந்துகொள்வதற்காக இந்த விஜயத்தை நான் மேற்கொண்டேன்.

இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்காக நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவதற்காகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆதரவை வழங்கவும் நான்  இந்த விஜயத்தினை மேற்கொண்டேன்.

நான் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டேன்.

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்தேன்.

அவர்கள் வெளிப்படுத்துகின்ற துணிச்சலும் மீள்எழுச்சி தன்மையும் நீதியை காண்பதற்கான அவர்களது உறுதிப்பாடும் எனது மனதை தொட்டுள்ளது.

இலங்கையில் மிகப்பெருமளவானவர்கள் காணாமல்போயுள்ளனர்  அவர்களிற்கு என்ன நடந்தது.

காணாமல்போதல் என்பது மிகமோசமான வன்முறை.

அது முடிவிற்கு வராது.

உங்களிற்கு தெரியாது உங்களிற்கு தெரியாது

பாதிக்கப்பட்டவர்களிற்கு பலபல வருடங்களிற்கு இந்த வலி தொடரும்.

மரணத்தை விட இது வலிமிகுந்தது.

வலியும் வேதனையும் மிக மோசமானதாக காணப்படும். உளவியல் சித்திரவதை.

நாளாந்தம் ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு வாரமும் தசாப்தங்களாக இந்த வலியும் வேதனையும் தொடரும்.

இது இலங்கையின் மீது விழுந்த கறை இந்த கறையை அகற்ற ஒவ்வொரு இலங்கை பிரஜையும் முன்வரவேண்டும்.

அந்த குழந்தைகள் எங்கே  நான்கைந்து மாத குழந்தைகள் மூன்று நான்கு வயதானவர்கள்

நான் அவர்களின் படங்களை பார்த்திருக்கின்றேன்.

15 வருடங்களாகியும் பதில் இல்லை இது மிக நீண்டகாலம்.

இது மன்னிக்க முடியாத குற்றம்- இவர்கள் குறித்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டும்.

இவர்கள் தாங்களாக முன்வந்து சரணடைந்தவர்கள்.

சரணடைவதற்கான பகுதிக்கு தாங்களாக சென்று சரணடைந்தார்கள்.

எங்கே அந்த குழந்தைகள்?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2024-06-23 19:24:45
news-image

'இளைஞர்களின் எழுச்சி' தொனிப்பொருளில் கண்டியில் இளைஞர்...

2024-06-23 19:16:51
news-image

மட்டக்களப்பு - பூனொச்சிமுனையில் மீன்பிடி படகு...

2024-06-23 19:57:32
news-image

நெடுந்தீவு இளைஞன் படுகொலை - சந்தேகநபர்களை...

2024-06-23 19:22:22
news-image

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம் :...

2024-06-23 19:18:00
news-image

மாணவனைத் தாக்கிய சம்பவத்தில் ஒரே பாடசாலையில்...

2024-06-23 19:38:52
news-image

யாழ்.பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள கொழும்பு சிறுவன்...

2024-06-23 19:19:24
news-image

பொலிசாரின் சன்மான பணத்தை மோசடி செய்த...

2024-06-23 19:34:03
news-image

வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணின் சொகுசு காரின்...

2024-06-23 19:13:36
news-image

நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களால் நாட்டுக்கு...

2024-06-23 17:56:58
news-image

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதை செய்வித்தவர்களும்...

2024-06-23 17:41:47
news-image

விவசாயிகளின் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படும்...

2024-06-23 17:35:46