(நெவில் அன்தனி)
தாய்லாந்தின் பாங்கொங்கில் இன்று திங்கட்கிழமை (20) ஆரம்பமான அங்குரார்ப்பண ஆசிய தொடர் ஓட்ட சம்பியன்ஷிப்பில் 4 x 400 மிற்றர் கலப்பு இன தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
4 x 400 மீற்றர் கலப்பு இன தொடர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 17.00 செக்கன்களில் இலங்கை அணியினர் நிறைவு செய்து இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.
வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கையின் கலப்பு இன தொடர் ஓட்ட அணியில் அருண தர்ஷன, சயுரி மெண்டிஸ், பசிந்து கொடிகார, நடீஷா ராமநாயக்க ஆகியோர் பங்குபற்றினர்.
ஜப்பானின் டொக்கியோ நகரில் ஞாயிறன்று நடைபெற்ற சீக்கோ கோல்டன் க்ரோன் ப்றீ போட்டியில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் 2ஆம் இடத்தைப் பெற்ற காலிங்க குமார இந்தப் போட்டியில் பங்குபற்றவில்லை. அவருக்குப் பதிலாக பசிந்து கொடிகார பங்குபற்றினார்.
அப் போட்டியை 3 நிமிடங்கள் 14.12 செக்கன்களில் நிறைவு செய்து இந்திய அணியினர் அந் நாட்டுக்கான தேசிய சாதனையை புதுப்பித்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர்.
வியட்நாம் அணியினர் (3:18.45) வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான 4 ஒ 100 மிற்றர் மற்றும் 4 ஒ 400 மிற்றர் தொடர் ஓட்டப் போட்டிகள், பெண்களுக்கான 4 ஒ 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டிகள் ஆகியவற்றில் இலங்கை அணியினர் நாளை செவ்வாய்க்கிழமை பங்குபற்றவுள்ளனர்.
இலங்கை அணிகள்
4 x 100 மீ. ஆண்கள்: கவிந்து சத்துரங்க, தினேத் இந்துவர, சமோத் யோதசிங்க, சானுக்க தர்மகீர்த்தி (பதில் வீரர்கள் - எச். கம்லத், தீனேத் சேனாநாயக்க.
4 x 100 மீ. பெண்கள்: ஷபியா யாமிக், ருமேஷிக்கா ரத்நாயக்க, தினாரா பண்டார, அனுருத்திகா முத்துகுமாரண (பதில் வீராங்கனைகள்: திலுஷானி சில்வா, மெதனீ ஜயமான்ன)
4 x 400 மீ. ஆண்கள்: காலிங்க குமாரகே, அருண தர்ஷன, தினுக்க தேஷான், பசிந்து கொடிகார. (பதில் வீரர்கள்: பபசர நிக்கு, இசுறு லக்ஷான்)
4 x 400 மீ. பெண்கள்: நடீஷா ராமநாக்க, ருமேஷிக்கா ரத்நாயக்க, சயுரி மெண்டிஸ், நிஷேந்த்ரா பெர்னாண்டோ. (பதில் வீராங்கனை: சபியா யாமிக்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM