சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 8,780 குடும்பங்களைச் சேர்ந்த 32,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 9 பிரதேச செயலகப் பிரிவில் 78 கிராம சேவகர் பிரிவில் 8,780 குடும்பங்களை சேர்ந்த 32,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 12 கிராம சேவகர் பிரிவில் 6,815 குடும்பங்களைச் சேர்ந்த 25,529 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.
19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்றைய நாளுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், வானிலைக்கு ஏற்ப எதிர்வரும் நாட்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM