(நெவில் அன்தனி)
ஜப்பானின் கோபே விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை நுவன் இந்திக்க பெற்றுக்கொடுத்தார்.
இன்று திங்கட்கிழமை (20) நடைபெற்ற ரி44 பிரிவு ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.83 செக்கன்களில் ஓடி முடித்த நுவன் இந்திக்க வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்து தாய்நாட்டிற்கு பெருமையும் புகழும் சேர்த்துக்கொடுத்தார்.
தகுதிகாண் போட்டியை 11.63 செக்கன்களில் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்ற நுவன் இந்திக்க ஒட்டு மொத்த நிலையில் இரண்டாம் இடத்தில் இருந்தார். ஆனால், இறுதிப் போட்டியில் அவர் சிறு தடுமாற்றம் அடைந்ததால் வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைய நேரிட்டது.
அப் போட்டியில் தென் ஆபிரிக்காவைச் செர்ந்த எம்ப்புமெலேலோ எம்லொங்கோ (11.34 செக்) தங்கப் பதக்கத்தையும் மலேசியாவைச் சேர்ந்த எடி பேர்னார்ட் (11.77 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தனர்.
அப் போட்டியில் சீனா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் நடுநிலையாளர் (ரஷ்யா) ஒருவரும் பங்குபற்றினர்.
பராலிம்பிக் தங்கப் பதக்க வீரர் தினேஷ் ப்ரியன்த ஹேரத் தலைமையில் இலங்கை வீர, வீராங்கனைகள் 6 பேர் உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றுகின்றனர்.
கோபே உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் 100 நாடுகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மெய்வல்லுநர்கள் பங்குபற்றுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM