ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தின நிகழ்விற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யும் போது கண்டி நகருக்கும் வருகை தருவார் என இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் நேற்று கண்டிக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு தொடர்பில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும்.மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கிடைத்த உன்னத பரிசுதான் பெளத்த தர்மமாகும்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தின நிகழ்வினை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது கட்டாயம் பிரதமர் கண்டி மாநகரத்திற்கு வருகை தருவார் என உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.