கிழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மூதூர் கிழக்கு - கட்டைபறிச்சான் வடக்கு - சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (19) காலை 8.52 சுபவேளையில் சேனையூர் ஸ்ரீ வருணகுல விநாயகர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பெட்டி ஊர்வலம் நாகம்மாள் ஆலயத்தினைச் சென்றடைந்து, பக்திபூர்வமான கிரியையோடு மடைப்பெட்டி வளர்ந்து ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ அ. அரசரெத்தினத்தினால் கையேற்கப்பட்டு பொங்கல் பெருவிழா நடைபெற்றது.
காவடி எடுத்தல், வேளை நூல் கட்டுதல், பொங்கல் சாடி வைத்தல், பால்பழப்பூசை, சிவலிங்க நாகதம்பிரானுக்கு புனித மஞ்சள் நீர் வார்க்கும் விசேட பூசை நிகழ்வுகள் இடம் பெற்றன.
நிறைவாக, விஷேட தீபாராதனைகளுடன் பூசையும், தொடர்ந்து, ஸ்ரீ மகா விஷ்ணு ஆறுமுகவேல் சகிதம் அம்பாள் உலாவும் நடந்தேறியது.
இந்நிகழ்வில் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ அ. அரசரெத்தினத்துக்கு ஆலய நிர்வாகத்தினால் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து வாழ்த்து மடல் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM