பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் 9 பேர் கைது!

20 May, 2024 | 07:44 PM
image

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட விசேட 20 குழுவினரால் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணியதாக கூறப்படும் மேலும் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேல் மாகாணத்தின் வடக்கு  பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கிரிதிவெல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயது சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இத்துருவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்பு 10, கொழும்பு 12 , கொழும்பு 15,  கொழும்பு 8 மற்றும் கொழும்பு 13 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 54 ,38, 28, 42, 38 மற்றும் 71 வயதுடைய ஆறு  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 1,090பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"அரசியல் கைதிகள் இல்லை" என்ற பழைய...

2025-01-15 15:13:18
news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-01-15 15:08:00
news-image

சீன ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

2025-01-15 15:04:13
news-image

இந்தியாவின் 76 வது குடியரசு தினத்திற்கு...

2025-01-15 14:53:41
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர்...

2025-01-15 14:33:19
news-image

சிகிரியா இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக...

2025-01-15 14:25:36
news-image

தொடங்கொடை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் வெளியான...

2025-01-15 14:23:57
news-image

மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள்...

2025-01-15 13:41:27
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2025-01-15 12:52:44
news-image

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'வெலேசுதா' உட்பட...

2025-01-15 12:57:59
news-image

இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர்...

2025-01-15 13:52:05
news-image

இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின்...

2025-01-15 12:30:02