மே இறுதியில் வெளியாகும் 'உப்பு புளி காரம்' அசல் இணைய தொடர்

20 May, 2024 | 06:38 PM
image

சல் இணைய தொடருக்கு டிஜிட்டல் தள பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து முன்னணி டிஜிட்டல் தளங்களும் பிரபலமான நட்சத்திர நடிகர்களின் பங்களிப்புடன் அசல் இணைய தொடர்களை தயாரித்து வழங்கி வருகிறது. அந்த வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 30 ஆம் திகதி முதல் 'உப்பு புளி காரம்' எனும் புதிய அசல் இணைய தொடரை ஒளிபரப்புகிறது.

இயக்குநர் எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'உப்பு புளி காரம்' எனும் இணைய தொடரில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஸ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ், ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷேக் இசையமைத்திருக்கிறார். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக விகடன் டெலி விஸ்டாஸ் இந்த இணையத் தொடரை தயாரித்திருக்கிறது.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' வயதான தம்பதிகள் மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகளைப் பற்றியும், அவர்களது குடும்பத்தில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களைப் பற்றியும் எழுதப்பட்ட இணைய தொடர் இது. இதில் காதல் + காமெடி + ஃபேமிலி சென்டிமென்ட் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இடம்பெறுகிறது.‌'' என்றார்.

'கனா காணும் காலங்கள்', 'ஹார்ட் ஃபீட்' போன்ற வெற்றிகரமான அசல் இணைய தொடர்களை தொடர்ந்து இந்த 'உப்பு புளி காரம்' எனும் இணைய தொடரும் டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right