(இராஜதுரை ஹஷான்)
இடைக்கால ஜனாதிபதியாகவே ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம். ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியிடம் எவ்வித இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படும். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்ற யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைத்தோம் இருப்பினும் ஜனாதிபதி சாதகமான பதிலை இதுவரை குறிப்பிடவில்லை.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் அரசியலில் வீரவசனம் பேசும் தரப்பினரது உண்மை முகம் வெளியாகும்.பொதுத்தேர்தல் இடம்பெற்றால் சிறந்த அரசியல் சூழல் ஏற்படும். இதன் காரணமாகவே பொதுத்தேர்தலை கோருகிறோம்.
எதிர்வரும் ஜுலை மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று முன்னாள் ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளது அவரது தனிப்பட்ட கருத்தே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல,ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் பற்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் இடைக்கால பதவிக்காகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை தெரிவு செய்தோம். 2022 ஆம் ஆண்டு வரை இன்று வரை அவருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை, எவ்வித இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM