விமான தபால் சேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 3 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேயின்: இளைஞர் கைது

20 May, 2024 | 07:45 PM
image

உகாண்டாவிலிருந்து விமான தபால் சேவை மூலம்  சீதுவையில் உள்ள களஞ்சியசாலை வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 3 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கேயின் போதைப்பொருள் சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இன்று (20) கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த போதைப் பொருட்களானது பொதிகளாக்கப்பட்ட குளிரூட்டி உதிரிப்பாகங்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு கொழும்பு ,மோதரை பிரதேசத்தில் உள்ள 27 வயது இளைஞரொருவரின் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேக நபரான இளைஞர் இந்த பொதிகளை எடுப்பதற்காகச் குறித்த களஞ்சியசாலைக்குச் சென்றிருந்த போது அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த பொதிகளிலிருந்து 483 கிராம் கொக்கேயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின்...

2025-03-20 09:37:05
news-image

மன்னார் விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த...

2025-03-20 09:48:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான...

2025-03-20 09:09:57
news-image

ரயில் மோதி வாகனம் விபத்து ; ...

2025-03-20 09:14:32
news-image

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ;...

2025-03-20 08:58:08
news-image

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க...

2025-03-20 08:40:17
news-image

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு...

2025-03-20 08:56:30
news-image

இன்றைய வானிலை

2025-03-20 06:14:11
news-image

தமிழ் இனப்படுகொலையை மறைக்க வேண்டாம்; பட்டலந்த...

2025-03-20 03:16:34
news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26
news-image

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை...

2025-03-20 02:55:15