"IT Gallery - Hikvision Partner Summit 2024" வெற்றியை கொண்டாடும் IT Gallery

20 May, 2024 | 05:31 PM
image

இலங்கையின் IT சேவைச் சந்தையில் முன்னணியில் திகழும் IT Gallery Computers Private Limited நிறுவனம், 2017 ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வரும் அதன் வருடாந்த பங்குதாரர் ஒன்றுகூடலின் முக்கிய நிகழ்ச்சியான, "IT Gallery - Hikvision Partner Summit 2024" நிகழ்வை சமீபத்தில் முன்னெடுத்திருந்தது. இந்த நிகழ்வு “New Security, New Success” (புதிய பாதுகாப்பு, புதிய வெற்றி) எனும் கருப்பொருளின் கீழ் நடைபெற்றதோடு, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நாடளாவிய ரீதியில் Hikvision இன் பங்காளிகளின் சிறந்த செயற்றிறனை ஊக்குவிக்கும் வகையில், அவர்களை அங்கீகரித்து கௌரவிக்க இதில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வானது, பாதுகாப்பு கண்காணிப்பு தொடர்பான சந்தையில் நவீன போக்குகள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தது.

IT Gallery Computers Private Limited பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டிலந்த பெரேரா, Hikvision உடனான IT Gallery இன் நீண்டகால கூட்டாண்மை குறித்து பெருமிதமடைவதாக தெரிவித்தார். "புத்தாக்க கண்டுபிடிப்புகள் தொடர்பான எமது அர்ப்பணிப்பு மற்றும் எமது பங்காளிகளுக்கான ஆதரவு ஆகியன, IT Gallery நிறுவனத்தை இலங்கையின் கண்காணிப்பு சந்தையில் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் நம்பகமான மையமாக நிறுவியுள்ளது." என அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த உச்சிமாநாட்டில், பிராந்திய முகவர்கள், விநியோகஸ்தர்கள், கூட்டாளர்கள், பெறுமதி சேர் சேவைத் தீர்வு வழங்குநர்கள் உள்ளிட்ட 350 இற்கும் மேற்பட்ட முன்னணி கூட்டாளர்கள் கலந்து கொண்டடிருந்தனர். பாதுகாப்பு கண்காணிப்பு துறையில் காணப்படும் தற்காலத்தின் முக்கிய போக்குகளை IT Gallery இங்கு விளக்கியிருந்தது. உச்சிமாநாட்டில், Hikvision இன் புதிய தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை IT Gallery காட்சிப்படுத்தியிருந்தது. இதில் Turbo HD 8.0 தொடர் மூலம் மேம்பட்ட பாதுகாப்பு அனுபவத்தை வழங்கும் Turbo HD Range தயாரிப்புகளும் அடங்குகின்றன. இது பயனர்களுக்கு அவர்களின் பார்வையிடல் பாதுகாப்பு தொகுதிகளை உயர் நிலைக்கு கொண்டு செல்ல உதவுகிறது. வயர்லெஸ் அலார தொகுதியான AX HOME Series ஆனது, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பயனர் நட்பு வடிவமைப்பு ஆகியவற்றை இணைத்து, வீட்டு உரிமையாளர்களின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது.

Hikvision இன் NVR 5.0 ஆனது, நுண்ணறிவான செயற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் இணைப்பை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் குறிக்கிறது. இது தடையற்ற மற்றும் புத்தாக்கமான பயனர் அனுபவத்தை வழங்குவதோடு மாத்திரமன்றி, Hikvision இன் இரண்டாம் தலைமுறை அணுகல் கட்டுப்பாட்டு தயாரிப்புகள் இணையத்தள முகாமைத்துவம், அங்கீகாரம் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு தீர்வுகளுக்கான மேம்பட்ட செயற்பாடுகளை அறிமுகப்படுத்துகின்றன. Hik-Connect for Teams மற்றும் Hik-Connect 6 உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட Hik-Connect தளமானது, மேம்பட்ட கண்காணிப்புத் திறன்களையும், ஆழமாக கற்கும் நுண்ணறிவையும் பாதுகாப்பு முகாமைத்துவ தொகுதிக்குக் கொண்டு சேர்க்கிறது. இவ்வர்த்தகநாமத்தின் தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளுக்கான அர்ப்பணிப்பை இவை யாவும் காண்பிக்கின்றன.

Hikvision இன் தெற்காசிய வணிகப் பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் Hugo Huang, IT Gallery நிறுவனத்தின் பங்களிப்பைப் பாராட்டி இங்கு உரையாற்றியிருந்தார். "Hikvision வர்த்தகநாமத்தை ஊக்குவிப்பதிலும் வெற்றிகரமான கூட்டான சமூகத்தை உருவாக்குவதிலும் IT Gallery நிறுவனத்தின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது" என அவர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையில் Hikvision இன் முன்னணி IOT விநியோகஸ்தர் எனும் IT Gallery இன் நிலைப்பாட்டை இந்த நிகழ்வு மேலும் உறுதிப்படுத்தி எடுத்துக் காட்டியதோடு, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் இணைப்பை ஏற்படுத்துவதற்கான Hikvision இன் புத்தாக்கமான தீர்வுகளை தழுவுவதற்கு பங்காளிகள் மற்றும் நுகர்வோரை இது ஊக்குவிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவனொளிபாத மலையைப் பாதுகாக்க சியபத பினான்ஸின்...

2024-06-22 17:12:50
news-image

சர்வதேச அடிச்சுவட்டை விஸ்தரித்துள்ள 99x நிறுவனம்...

2024-06-20 17:30:20
news-image

டெல்மேஜ் ஹெல்த்கெயார் மூலம் பல் உட்பொருத்தல்...

2024-06-13 18:52:47
news-image

பூமிக்கு 2,000 மரங்கள் : உலக...

2024-06-13 15:53:57
news-image

கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு...

2024-06-10 17:55:53
news-image

பான் ஏசியா வங்கியுடன் இலங்கையின் தேசிய...

2024-06-04 11:51:48
news-image

Uber Springboard: இலங்கையில் வழிகாட்டல் திட்டத்துடன்...

2024-06-03 16:42:48
news-image

ராணி சந்தனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பவுண்கள்

2024-06-03 16:53:26
news-image

LMD இன் மிகவும் விரும்பப்படும் தயாரிப்பு...

2024-06-03 17:13:46
news-image

அளவுத்திருத்த சிறப்பின் ரகசியங்களை திறப்பதற்கான நுழைவாயில்...

2024-05-30 17:29:08
news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24