இந்திய மக்களவைத் தேர்தலில் ஐந்தாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான ராகுல் காந்தி ஆய்வு செய்தார்.
காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கேரள நாட்டில் உள்ள வயநாடு எனும் தொகுதியில் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
வயநாடு தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 26 ஆம் திகதி அன்று நடைபெற்றது. ரேபரேலி தொகுதிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதனைப் பார்வையிடுவதற்காக ராகுல் காந்தி புதுதில்லியிலிருந்து லக்னோ விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
பின்னர் சாலை மார்க்கமாக பயணித்து ரேபரேலி தொகுதிக்குச் சென்று அங்கு மகாத்மா காந்தி கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு செய்தார். அதன் போது அங்கு வாக்களிக்க வந்தவர்கள் ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவை ஆய்வு செய்தார்.
இதனிடையே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் இந்த முறை பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்பதும், கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலின் போது இரு தொகுதிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM