கல்லீரல் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சைகள்

Published By: Digital Desk 7

20 May, 2024 | 05:31 PM
image

உலகளவில் மனிதர்களை தாக்கும் புற்று நோய்களில் ஆறாம் இடத்தை பெற்றிருப்பது கல்லீரல் புற்றுநோய். இந்தப் புற்றுநோயால் பெண்களை விட, ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், ஆண்டுதோறும் இலட்சக்கணக்கிலான புதிய கல்லீரல் புற்றுநோயாளிகள் உருவாகிறார்கள் என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது .

மேலும் கல்லீரல் புற்றுநோய் குறித்த முழுமையான விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படவில்லை என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள் இந்நிலையில் கல்லீரலில் ஏற்பட்டிருக்கும்  புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நவீன சிகிச்சைகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

திடீரென்று உடல் எடை குறைவு , பசியின்மை, வயிற்றின் மேல் பகுதியில் வலி, குமட்டல், வாந்தி, சோர்வு, வயிறு வீக்கம், தோலில் நிற மாற்றம், வெளியேறும் மலத்தின் நிறமாற்றம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். உடனடியாக வைத்திய நிபுணரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

அப்போது வைத்தியர்கள் எம் ஆர் ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், குருதி பரிசோதனை, பயாப்ஸி எனும் திசு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவர். மேலும் இத்தகைய பரிசோதனையின் மூலம் நீங்கள் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பில் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதனை துல்லியமாக அவதானித்து சிகிச்சைகளை தீர்மானிப்பர்.

மேலும் இந்தத் தருணத்தில் சத்திர சிகிச்சை தான் முதன்மையான தீர்வு என வைத்தியர்கள் வலியுறுத்துவர். ஆனால் சிலரால் சத்திர சிகிச்சை மேற்கொள்ள இயலாத நிலை இருக்கும். இந்நிலையில் அவர்களுக்கு ரேடியோ ஃபிரிக்குவன்சி அப்ளேஷன் மற்றும் கிரையோ அப்ளேஷன் போன்ற நவீன சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குவர். இத்தகைய சிகிச்சையின் போது கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் புற்றுநோய் கட்டி மீது சிறிய அளவிலான ஊசியை செலுத்தி அதன் மூலம் பிரத்யேக மின்சாரத்தை உட்செலுத்தி புற்றுநோய் செல்களை அழிப்பர்.

மேலும் சிலருக்கு கல்லீரலில் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு கிரையோஅப்ளேஷன் எனப்படும் நவீன சிகிச்சையும் மேற்கொள்வர். இத்தகைய தருணங்களில் கல்லீரலில் இருக்கும் புற்றுநோய் செல்களின் மீது நுண்துளை மூலம் ஊசியை செலுத்தி அதனூடாக திரவ வடிவிலான நைட்ரஜனை உட்செலுத்தி புற்றுநோய் செல்களை உறைய செய்து செயலிழக்க செய்வர்.‌ இந்த இரண்டு சிகிச்சைகளின் போது அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம் கிடைக்கும் புகைப்படத்தை வழிகாட்டியாக பயன்படுத்தி சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் தருவர்.

இத்தகைய சிகிச்சைகளைத் தொடர்ந்து மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை, உணவுமுறை, உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ச்சியாக கடைப்பிடித்தால் இத்தகைய பாதிப்பிலிருந்து விரைவில் முழுமையாக நிவாரணம் பெறலாம்.

வைத்தியர் சந்தோஷ் குமார்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அசாதாரணமான கண் துடிப்பு பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-20 19:53:31
news-image

முதுகெலும்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-06-19 20:19:16
news-image

பித்தப்பை கற்களை அகற்றும் நவீன சிகிச்சை

2024-06-18 17:32:01
news-image

தோள்பட்டை சவ்வு அழுத்தப் பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-17 15:50:29
news-image

புற்றுநோய் கட்டிகளை லேப்ரோஸ்கோப்பிக் சத்திர சிகிச்சை...

2024-06-15 13:45:29
news-image

தண்டுவடத்தில் ஏற்படும் காசநோய் பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-14 16:56:58
news-image

அசாதாரண கருப்பை ரத்தப்போக்கு பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 13:23:09
news-image

இடைநிலை நுரையீரல் தொற்று பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 09:12:17
news-image

மூளை கட்டியின் வகைகளும், காரணங்களும்...!?

2024-06-10 17:28:32
news-image

நீரிழிவு நோயால் நரம்பு மண்டல பாதிப்பு...

2024-06-08 16:19:56
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை ரத்த...

2024-06-07 18:48:18
news-image

குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதய குறைபாடு ஏற்படுவதை...

2024-06-04 14:04:02