பதுளை தெமட்டவெல்ஹின்ன பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 3 கிலோ 80 கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை தெமட்டவெல்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பகுதியில் கேரளா கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 80 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
சந்தேக நபரின் வீட்டுப் பகுதியில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டு அதற்குள் கஞ்சா பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பகுதியில் அதிகளவில் கஞ்சா மீட்கப்பட்டது இதுவே முதல் தடவை என பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பகுதிக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் உபுல் சந்தன, மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் சர்மிந்த பிரியந்த, உட்பட அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பதுளை பொலிஸ் அதிகாரிகள் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சந்தேக நபரை பதுளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM