விமல் - கருணாஸ் இணைந்து கலங்கடிக்கும் 'போகுமிடம் வெகு தூரமில்லை'

Published By: Digital Desk 7

20 May, 2024 | 05:02 PM
image

தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான கருணாசும், கதையின் நாயகர்களில் ஒருவரான விமலும் இணைந்து நடித்திருக்கும் 'போகுமிடம் வெகு தூரமில்லை' எனும் திரைப்படம் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் உணர்வுபூர்வமான படைப்பு என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் மைக்கல் கே. ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'போகுமிடம் வெகு தூரமில்லை' எனும் திரைப்படத்தில் விமல், கருணாஸ், மேரி ரிக்கெட்ஸ், 'ஆடுகளம்' நரேன், மனோஜ் குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.  அமரர் ஊர்தி  வாகனத்தை இயக்கும் இரண்டு மனிதர்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஷார்க் 9 பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிவா கில்லாரி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தினை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது அப்போது படக்குழுவினருடன் இயக்குநர் செந்தில்நாதன், பாடலாசிரியர் -கவிஞர் சினேகன், இயக்குநர் தினகரன், தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்த கதைக்களம் புதிது. இந்த படத்திற்காக வெகுதூரம் பயணித்துள்ளேன். கதை மீது நம்பிக்கை கொண்ட தயாரிப்பாளர் இப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். இந்தத் திரைப்படத்தில் வசனங்கள் பேசாமல் முக பாவனையுடன் நடிக்க வேண்டி இருந்தது. அதனை நடிகர் விமல் நன்றாக நடித்து எங்களை அசத்தினார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கிறேன். வித்தியாசமான அனுபவத்தையும் வழங்கும் என நம்புகிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏஸ் - திரைப்பட விமர்சனம்

2025-05-23 18:09:23
news-image

அறிமுக நாயகன் கே.ஜெ.ஆர் நடிக்கும் 'அங்கீகாரம்'...

2025-05-23 18:08:21
news-image

புதுமுகங்கள் நடித்திருக்கும் 'மனிதர்கள்' திரைப்படத்தின் வெளியீட்டுத்...

2025-05-23 18:06:34
news-image

ஜூனில் வெளியாகும் சத்யராஜ் - காளி...

2025-05-23 18:06:10
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்'...

2025-05-23 17:32:32
news-image

மோகன்லால் நடிக்கும் ' விருஷபா' படத்தின்...

2025-05-22 16:02:23
news-image

நடிகர் முகேன் ராவ் நடிக்கும் 'ஜின்-...

2025-05-22 15:58:52
news-image

அப்துல் கலாம் சுயசரிதையில் தனுஷ்

2025-05-22 15:51:35
news-image

தக்ஸ் லைஃப்'பின் 'சுகர் பேபி'

2025-05-22 15:50:50
news-image

சித்தார்த் - சரத்குமார் இணைந்து நடிக்கும்...

2025-05-22 15:25:37
news-image

விஜய் அண்டனி நடிக்கும் ' மார்கன்'...

2025-05-22 19:56:44
news-image

சர்வதேச விருது விழாவில் சிறந்த நடிகர்...

2025-05-21 18:09:37