'உலகநாயகன்' கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2 'அப்டேட்

Published By: Digital Desk 7

20 May, 2024 | 04:36 PM
image

'உலக நாயகன்' கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் 'இந்தியன் 2' திரைப்படத்தினை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' திரைப்படத்தில் 'உலகநாயகன்', கமல்ஹாசன், சித்தார்த், எஸ். ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு தொடங்கி இருக்கிறது. இதில் முதல் கட்டமாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் துடுப்பாட்டப் போட்டியில் பட குழுவினர் பங்கு பற்றி இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டனர். அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகைகளில் வெளியாகிறது. ஜூன் மாதம் முதல் திகதியன்று சென்னையில் பிரம்மாண்டமாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. மேலும் இப்படத்தின் இடம்பெற்ற முதல் பாடல் இம்மாதம் 22 ஆம் திகதியன்று வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் 'இந்தியன் 2' படம் வெளியாகி ஆறு மாதத்திற்கு பிறகு, 'இந்தியன் 3' படமும் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இதனிடையே 'இந்தியன்' படத்தின் முதல் பாகத்திற்கு 'இசைப்புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரும் வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தில் இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதனால் படத்தின் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right