கேரளகஞ்சாவுடன் நான்கு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து புத்தளம் பகுதியில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 5 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரும் நாவத்தேகம பகுதியில் வைத்து கேரள கஞ்சா போதைப்பொருளை வேன் ஒன்றில் கடத்த முற்படும் போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் கேரள கஞ்சாவுடன் ஆனமடுவ பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.