கும்புக்கன் ஓயாவில் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!

20 May, 2024 | 11:52 AM
image

லுணுகலை, கும்புக்கன் ஓயாவில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (19) மீட்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை, துபஹிடியவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று (19 )பிற்பகல் லுணுகலை, கும்புக்கன் ஓயாவிற்கு நீராடச் சென்றுள்ள நிலையில் இவரது 17 வயது மகளும் 12 வயது மகனும் வீட்டிலிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நபரொருவரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் லுணுகலை, கும்புக்கன் ஓயாவிற்கு அருகில் வைத்து  இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது முகம் மற்றும் தலையில் பலத்த காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரும் அவரது கணவரும் நீண்ட காலமாக முரண்பாட்டில் ஈடுபட்டிருந்துள்ளதுடன் உயிரிழந்த பெண் இது தொடர்பில் பலமுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பதுளை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் ஜேர்மனிய...

2025-03-19 15:01:24
news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்!

2025-03-19 14:17:50
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12
news-image

யாழ். மருதனார் மடத்தில் விபத்து ;...

2025-03-19 13:13:07
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான...

2025-03-19 13:03:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01