இலங்கை தமிழ் அரசுக் கட்சி மீது திருகோணமலை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முடிவுறுத்தி கட்சியின் தெரிவுகளை மீளவும் நடத்துவதற்கு கட்சியின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது. அதன் பின்னர், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்,
திருகோணமலை நீதிமன்றில் உள்ள கட்சி தொடர்பான வழக்கில் வழக்காளி கோருகின்ற நிவாரணங்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
அந்த வகையில் கட்சியின் நிலைப்பாடுகளை நிலைநிறுத்தி யாப்பினுடைய அடிப்படை விடயங்களை முன்னிறுத்தி எவ்வாறு செயலாற்றியிருக்கின்றோமோ அதன் அடிப்படையில் தலைவர் உட்பட அனைத்து பதவிகளுக்கான தெரிவுகளையும் மீள நடாத்துவதென ஏகமனதாக தீர்மானித்திருக்கின்றோம்.
அந்த வகையில், முதலில் வழக்கை கைவாங்கி கட்சியினை எமது வீட்டுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியினை எடுத்திருக்கின்றோம்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளர் தொடர்பாக இன்று பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சிரேஸ்ட தலைவர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோரின் கருத்துக்களும் பரிசீலிக்கப்பட்டது. இவற்றினை ஓர் ஆலோசனைக்காக எடுத்திருக்கின்றோம். இது தொடர்பாக தொடர்ந்தும் மத்திய செயற்குழு மாவட்டக் கிளைகளுடன் கூடி உரிய நேரத்தில் முடிவினை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
அதுவரை கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜாவும் பொதுச்செயலாளராக ப.சத்தியலிங்கமும் செயற்படுவார்கள். எமது கட்சி இயங்கிக்கொண்டிருக்கிறது. வழக்கு செயற்பாடுகள் முடிவுறுத்தப்பட்ட பின்னர், புதிய தெரிவுகள் இடம்பெறும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM