இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இவ்வருட ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கோஹ்லியின் வலது தோற்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இவர் சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளது.

கோஹ்லி ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவராக இருப்பதுடன், அவர் ஐ.பி.எல். தொடரில் 973 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் கோஹ்லி ஒரு போட்டியில் மாத்திரமே விளையாடமாட்டார் என பெங்களூர் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.