ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு

Published By: Digital Desk 3

20 May, 2024 | 12:15 PM
image

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான மெஹர் செய்திச் சேவை இன்று திங்கட்கிழமை (20) உறுதிப்படுத்தியுள்ளது.

அசர்பைஜானில் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) ஈரான் புறப்பட்டார்.

இந்நிலையில், கடுமையான பனிமூட்டத்தில் மலைப்பகுதியை கடக்கும்போது  கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்செகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள டிஸ்மார் காட்டில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.

விபத்தில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகொப்டரில் பயணித்த வெளிவிவகார அமைச்சர் உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் ஜனாதிபதி ரைசியுடன் உயிரிழந்தவர்களின் விபரம் இதோ...!

  • வெளிவிவகார ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் (Foreign Minister Hossein Amirabdollahian)
  • கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி (East Azerbaijan Governor Malek Rahmati)
  • கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஈரானிய உச்ச தலைவர் முகமது அலி அலே-ஹஷேமின் பிரதிநிதி (Representative of the Iranian supreme leader in East Azerbaijan Mohammad Ali Ale-Hashem)
  • ஜனாதிபதியின் தலைமை பாதுகாவல் அதிகாரி  மெஹ்தி மௌசவி  (Head of presidential guard Mehdi Mousavi)
  • ஹெலிகொப்டரின் விமானி
  • துணை விமானி 
  • மெய்பாதுகாவலர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக ஊடக குழு உரையாடலில் இரகசிய...

2025-03-26 14:28:31
news-image

கடவுச்சீட்டை மறந்த விமானி ; திரும்பிச்...

2025-03-26 16:10:30
news-image

கருங்கடலில் யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும்...

2025-03-26 13:57:31
news-image

போரில் சிக்குண்டுள்ள உக்ரைனில் அதிர்ச்சியடைநத நிலையில்...

2025-03-26 12:21:38
news-image

பேஸ்புக்கை முடக்கியது பப்பு வா நியூ...

2025-03-26 12:37:46
news-image

தென் கொரியாவில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின்...

2025-03-26 10:22:22
news-image

ஆப்பிரிக்காவில் சரக்கு கப்பல் கடத்தல்: 2...

2025-03-26 09:37:56
news-image

கனடா தேர்தலில் சீனாரஷ்யா இந்தியா தலையீடு:...

2025-03-25 16:04:39
news-image

யேமன் மீதான தாக்குதல் திட்டங்களை தவறுதலாக...

2025-03-25 13:19:10
news-image

ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்டின்...

2025-03-25 14:28:26
news-image

நியூசிலாந்தின் தென்தீவை தாக்கியது கடுமையான பூகம்பம்

2025-03-25 10:38:38
news-image

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து மீறும்...

2025-03-25 11:48:44