ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டரின் சிதைவுகள் காணப்படுவதாக துருக்கியின் ஆளில்லா விமானங்கள் தெரிவிக்கும் பகுதி தப்பிரிஸ் நகரிலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் காணப்படுவதாக அல்ஜசீராதெரிவித்துள்ளது.
தவில் என்ற கிராமத்தில் ஹெலிக்கொப்டரின் சிதைவுகள் காணப்படுவதாக மீட்பு பணியாளர்கள் கருதுகின்றனர் அந்த பகுதியை சென்றடைவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை 75 பேர் கொண்ட மீட்பு குழுவினரை அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக ஈரானின் செம்பிறைச்சங்கம் தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டரின் சிதைவு என கருதப்படுவதிலிருந்து வெளிவரும் வெப்பத்தை தனது ஆளில்லா விமானங்கள் கண்டுபிடித்துள்ளன என துருக்கி தெரிவித்துள்ளது.
ஈரானில் மீட்பு பணிகளிற்கு துருக்கி பயன்படுத்தி வரும் அகின்சி ஆளில்லா விமானம் விபத்தில் சிக்கிய ஹெலிக்கொப்டரின் சிதைவிலிருந்து வெளியாகும் வெப்பத்தை கண்டுபிடித்துள்ளது என கருதுவதாக துருக்கி தெரிவித்துள்ளது.
இந்த விபரங்களை துருக்கி ஈரானுடன் பகிர்ந்துகொண்டுள்ளது. துருக்கியின் ஆளில்லா விமானங்கள் ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் காணப்படுவதாக தெரிவித்துள்ள பகுதிக்கு ஈரான் தனது மீட்பு பணியாளர்களை அனுப்பியுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM