ஜப்பானில் காலிங்க குமாரகே இரண்டாம் இடம்

19 May, 2024 | 03:38 PM
image

(நெவில் அன்தனி)

ப்பானின் டோக்கியோ தேசிய விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற சீக்கோ கோல்டன் க்ரோன் ப்றீ  ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்  போட்டியில் இலங்கையின் காலிங்க குமாரகே இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

400 மீட்டர் ஓட்டப் போட்டியை 45.57 செக்கன்களில் நிறைவு செய்து காலிங்க குமாரகே இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

இம்முறையும் ஒலிம்பிக் அடைவு மட்டமான 45.00 செக்கன்களை அவர் அண்மிக்கத் தவறினார்.

அப்போட்டியை 45.21 செக்கன்களில் நிறைவு செய்த ஜப்பான் வீரர் கென்டாரோ சென்டோ முதலாம் இடத்தைப் பெற்றதுடன் அவரது நாட்டைச் சேர்ந்த கெய்ட்டோ கவாபாட்டா (45.77 செக்.) 3ஆம் இடத்தைப் பெற்றார்.

எவ்வாறாயினும், அடுத்துவரும் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் காலிங்க குமாரகேயும் அருண தர்ஷனவும் பெறும் தரிவரிசை புள்ளிகளின் பிரகாரம் இருவரும் ஒலிம்பிக் தகுதியைப் பெறுவர் என ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் நிறுவனம் நம்பிக்கை வெளிப்பிட்டது.

இது இவ்வாறிருக்க, சீக்கோ கோல்டன் க்ரோன் ப்றீயில் பங்குபற்றிய காலிங்க குமாரகே இன்று (19) இரவு தாய்லாந்தை சென்றடைந்து இலங்கை தொடர் ஓட்டக் குழுவினருடன் இணைந்கொள்ளவுள்ளார்.

தாய்லாந்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறவுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு இன தொடர் ஓட்டப் போட்டிகளில் இலங்கை அணியினர் பங்குபற்றவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு...

2024-06-23 18:52:47
news-image

பெட் கமின்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் ஹெட்-ட்ரிக்;...

2024-06-23 10:11:07
news-image

பங்களாதேஷை வீழ்த்தி உலகக் கிண்ண அரை...

2024-06-23 05:39:40
news-image

ரி20 உலகக் கிண்ண அரை இறுதிச்...

2024-06-22 19:31:12
news-image

விதிகளை நடைமுறைப்படுத்துவதில் ஐ.சி.சி. இரட்டை வேடம்...

2024-06-22 16:33:52
news-image

கண்டி ஒலிம்பிக் தின கொண்டாட்டத்தில் ஆயிரத்துக்கும்...

2024-06-22 16:16:27
news-image

சேஸ் பந்துவீச்சிலும் ஹோப் துடுப்பாட்டத்திலும் அசத்தல்;...

2024-06-22 11:11:48
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடிப்புச் செய்த இலங்கை...

2024-06-22 10:19:13
news-image

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் உதவித்...

2024-06-22 00:37:19
news-image

குவின்டன் டி கொக், டேவிட் மில்லரின்...

2024-06-22 00:06:34
news-image

இணை வரவேற்பு நாடுகள் மேற்கிந்தியத் தீவுகள்...

2024-06-21 21:45:08
news-image

அரை இறுதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் முயற்சியுடன்...

2024-06-21 14:03:31