சாதிக்காய் விலையில் பாரிய வீழ்ச்சி : விவசாயிகள் பாதிப்பு

19 May, 2024 | 10:10 AM
image

இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவனியைப் பெற்றுத் தரும் முக்கிய ஏற்றுமதி விவசாய உற்பத்தியான சாதிக்காயின் (nutmeg) விலை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதால் தாம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக கண்டி மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த சாதிக்காய் உற்பத்தியின் 80 சதவீதம் கண்டி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தபோதும் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்றுமதி விவசாய திணைக்களம் பெற்றுத் தந்துள்ள தரவுகளின்படி 2022ஆம் ஆண்டு நாட்டில் 2936 ஹெக்டேயர் நிலத்தில் சாதிக்காய்  உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், 476.06 மெட்ரிட் தொன் சாதிக்காய் உற்பத்தியை ஏற்றுமதி செய்ததன் மூலம் 2022இல்  பெறப்பட்டுள்ள வெளிநாட்டு செலாவணி 797.18 மில்லியன் ரூபாயாகும்.

இருந்தபோதும் சில மாதங்களுக்கு முன் 1300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சாதிக்காயின் விலை தற்போது 700 ரூபாயாக  குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

சாதிக்காய் தயாரிப்பதற்கு பெரும் செலவீனம் ஏற்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், சாதிக்காய் உற்பத்தி மூலம் பெறப்பட்ட வருமானத்தில் பாரிய வீழ்ச்சியை காண முடிவதாகவும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் அந்த விவசாயிகள், இதற்கு தீர்வாக அரசாங்கம் முன்வந்து சலுகைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58