கௌரவம் - மரியாதை - கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கான எளிய பரிகாரம்..!

18 May, 2024 | 06:10 PM
image

எம்மில் சிலர் தங்கள் சக்திக்கேற்ற வகையில் தங்களின் பொருளாதார வலிமையை உணர்ந்து சிலருக்கு  உறுதிமொழி அளித்திருப்பார்கள். அந்த உறுதிமொழி விவரிக்கப்பட இயலாத காரணங்களால் நிறைவேற்ற முடியாத சூழலில் அவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் ஆதங்கமாக மாறி... அது மன அழுத்தமாக மாறி.. நாளாந்த செயல்பாட்டில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும். இதனால் அவர்கள் தங்களையே நொந்து கொண்டு, வேறு வழி இல்லாமல் மனதளவில் பழி சொல்லை தாங்க தயாராகுவார்கள். இதுபோன்ற உளவியல் ரீதியான சிக்கலை எதிர்கொள்பவர்களுக்கு... அதிலிருந்து விடுபடுவதற்கான எளிய வாழ்வியல் பரிகாரத்தை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மிருகசீரிஷம் எனும் நட்சத்திரம் வரும் நாளில் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் அல்லது பெருமாளுக்கும், தாயாருக்கும் என இறைவன் - இறைவி இருவருக்கும் புதிய வஸ்திரத்தை வாங்கி, சாற்றி, அதை ஆலயத்தில் இறைவனுக்கு இறைத்தொண்டு செய்யும் ஊழியருக்கு தானமாக வழங்கிட வேண்டும். இறைவன் - இறைவி உடுத்துவதால் அதற்கேற்ற வகையில் பிரத்யேகமான வண்ண உடைகளை வாங்கி அதனை தானமாக வழங்கிட வேண்டும்.

அருகில் உள்ள ஆலயத்தில் வஸ்திர தானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டாலோ அல்லது வாங்கிக் கொள்வதற்கு யாரும் இல்லை என்றாலோ.. நீங்கள் குருவாக மதிக்கும் ஒருவரை தெரிவு செய்து அவருக்கு அந்த வஸ்திர தானத்தை வழங்கிட வேண்டும். இதனை மனம் உவந்து மேற்கொள்ளும் போது உங்களுடைய வாக்கு சாத்தியப்படுத்துவதற்கான அனைத்து வழிமுறைகளையும், இந்த பிரபஞ்சம் உங்களுக்கு வழங்கும்.

மேலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லையே..! என் மீது மற்றவர்கள் பழி சுமத்துவார்களே..! என்று அசலாக கவலை அடைபவர்கள் இந்த பரிகாரத்தை மேற்கொண்டால் அவர்களது கௌரவமும், மரியாதையும் உரிய தருணத்தில் காப்பாற்றப்படும். இந்த பரிகாரத்தை மேற்கொண்டு ஏராளமானவர்கள் பலனடைந்திருக்கிறார்கள்.

தொகுப்பு சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவகிரக தோஷங்களை நீக்கும் குளியல் பரிகாரம்..!

2024-06-20 19:53:01
news-image

நினைத்ததை நடத்திக் காட்டும் நாமாவளி பரிகாரம்..!

2024-06-19 20:20:49
news-image

வெற்றிகளை அள்ளி வழங்கும் அரச மர...

2024-06-18 17:35:24
news-image

வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த பொங்கலுக்கான...

2024-06-18 16:31:12
news-image

வெற்றியை அள்ளித்தரும் பாராயண பரிகாரம்...!

2024-06-17 20:42:41
news-image

அரசாங்க வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான எளிய...

2024-06-15 14:04:38
news-image

பண வசியத்திற்கும், மன அமைதிக்கும் இரண்டு...

2024-06-14 16:35:06
news-image

கடன் பிரச்சனை தீர்வதற்கான எளியதான பரிகாரங்கள்..!

2024-06-13 15:52:06
news-image

நினைத்ததை நடத்தி வைக்கும் ஏலக்காய் தீப...

2024-06-12 15:14:53
news-image

நோயை குணப்படுத்தும் எளிய பரிகாரம்...!?

2024-06-11 19:02:13
news-image

சர்வ அருளை வழங்கும் சரள யோகம்

2024-06-10 21:27:26
news-image

புண்ணியத்தை அருளும் ஸ்ரீ நாக யோகம்!

2024-06-08 16:47:15