கவின் அணிந்து கொள்ளும் 'மாஸ்க்'

18 May, 2024 | 05:51 PM
image

 'டாடா', 'ஸ்டார்' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'மாஸ்க்' என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகும் 'மாஸ்க்' திரைப்படத்தில் கவின், ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி சர்மா, பால சரவணன், விஜே அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

இந்தத் திரைப்படத்தை கிராஸ் ரூட் பிலிம் கம்பனி மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வெற்றிமாறன் மற்றும் எஸ். பி. சொக்கலிங்கம் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

வெற்றிமாறன் - கவின் இணைந்திருப்பதால் 'மாஸ்க்' திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right