தமிழீழம் என்றாவது ஒருநாள் மலர்ந்தே தீரும் - சத்யராஜ் ஆருடம்

18 May, 2024 | 05:48 PM
image

'இலங்கை மண்ணில் தமிழீழம் என்றாவது ஒருநாள் மலர்ந்தே தீரும்' என திரைப்பட நடிகரும், தமிழின உணர்வாளருமான சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

மில்லியன் ஸ்டுடியோ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம் எஸ் மன்சூர் தயாரிப்பில் இயக்குனர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் வசந்த் ரவி, ராஜீவ் மேனன் தான்யா ஹோம் ராஜீவ் பிள்ளை உள்ளிட்ட பலரின் நடிப்பில் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கும் வெப்பன் எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி பிரபலங்கள் சிறப்பு அதிதியாக பட குழுவினருடன் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் புரட்சித் தமிழன் சத்யராஜ் பேசுகையில்,

'' சுப்பர் ஹியூமன்... சுப்பர் மேன்.. என்பவர் யார்? என எம்மிடம் கேட்டால்.. திரையில் தோன்றி வீர தீர சாகசம் செய்பவர் சுப்பர் மேன் அல்ல. தரையில் வீரத்தை காட்டுபவர் தான் சுப்பர் மேன். அதுபோல் தரையில் வீரத்தை காட்டிய மிகப்பெரிய சுப்பர் மேன்.. தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் தான். அவர் தலைமையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் போர், சர்வதேச வல்லரசு நாடுகளின் தவறான புரிதலால்.. மிகப் பெரும் சூழ்ச்சியால்.. ஒடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்டது என்று கூறுவதை விட பின்னடைவு ஏற்பட்டது என்று சொல்வதுதான் பொருத்தமானது. ஏனெனில் என்றைக்காவது ஒருநாள் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும். அது காலத்தின் கட்டாயம். ஏன் இதை சொல்கிறேன் என்றால்.. இன்று மே 17 - முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடைபெற்ற நாள். அங்கு அன்று மரணித்த போராளிகள் அனைவருக்கும், தமிழ் உறவுகளுக்கும்... என்னுடைய வீரவணக்கம்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்