'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' ஏஸ்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' ஏஸ்' எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். சூதாட்டத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 Cs என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இவை ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதனிடையே 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான 'மெரி கிறிஸ்மஸ்' -வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அவர் நடிப்பில் வெளியாகும் 'ஏஸ்' திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியைப் பெற்றால் தான்... விஜய் சேதுபதியின் சந்தை மதிப்பு தொடர்ந்து நீடிக்கும் என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM