ரயிலில் பல்கலை மாணவிக்குத் தொல்லை கொடுத்த 6 இளைஞர்கள் கைது!

18 May, 2024 | 04:41 PM
image

ரயிலில் பயணித்த பல்கலை மாணவியொருவருக்கு தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும்  6 இளைஞர்கள் ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலிலிருந்த 6 இளைஞர்கள் அதே ரயிலில் பயணித்த பல்கலை மாணவியொருவருக்கு பலமுறை தொல்லை கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பல்கலை மாணவி இது தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில்  முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர்கள் ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்குற்பட்ட 6 இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்வதற்காக வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (18) சனிக்கிழமை ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03
news-image

முச்சக்கரவண்டியின் பாகங்கள்,ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது

2025-02-09 17:27:04
news-image

தோணா பாலம் - மீள் கட்டுமான...

2025-02-09 17:25:24
news-image

கெக்கிராவயில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2025-02-09 17:24:34