(நா.தனுஜா)
இலங்கை அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையானது பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்குத் தவறியிருக்கின்றது. பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தி உருவாக்கப்படாத பொறுப்புக்கூறல் பொறிமுறையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நம்பகத்தன்மை வாய்ந்த பொறிமுறையாகக் கருதமுடியாது என சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மூன்று தசாப்காலப்போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு நேற்றைய தினத்துடன் (18) 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இருப்பினும் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பதிவான குற்றங்கள், மீறல்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரை முன்னிறுத்திய நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு, இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:
இலங்கையில் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், போர்க்கால மீறல்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கிறது. இவை நியாயமான நல்லிணக்க செயன்முறையை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாரில்லை என்பதையே காண்பிக்கின்றன.
வட, கிழக்கைச் சேர்ந்த இலக்கிடப்பட்ட தனிநபர்கள் தொடர் கண்காணிப்புக்களுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகிவருவதுடன், அரச கட்டமைப்புக்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கமும் தொடர்கிறது. அத்தோடு அரச கட்டமைப்புக்களால் காணிகள் அபகரிக்கப்படல், ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், பயங்கரவாத்தடைச்சட்டத்தின் முறையற்ற பயன்பாடு என்பனவும் தொடர்கின்றன.
அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறை செயற்திறனற்றது என்பதுடன், அது பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்குத் தவறியிருக்கின்றது. பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தி உருவாக்கப்படாத பொறுப்புக்கூறல் பொறிமுறையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நம்பகத்தன்மை வாய்ந்த பொறிமுறையாகக் கருதமுடியாது.
இவ்வாறானதொரு பின்னணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கதாகும் என்று தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM