(ஆர்.சேதுராமன்)
ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுச் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் பதவி வகிக்கக்கூடிய தவணைகள் மீதான வரையறைகளை நீக்குவதற்கு ஆதரவாக அச்சம்மேளனம் வியாழக்கிழமை (16) வாக்களித்துள்ளது. இதன்படி, ஒருவர் ஒரு பதவிக்கு எத்தனை தடவைகள் வேண்டுமானலும் தெரிவுசெய்யப்பட முடியும்.
இதுவரை இக்கூட்டுச் சம்மேளனத்தின் தலைவர், மற்றும் ஏனைய நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள் தலா 4 வருடங்களைக் கொண்ட, 3 தவணைகளுக்கே அதிகபட்சமாக தெரிவுசெய்யப்பட முடியுமாக இருந்தது.
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்ற, ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுச் சம்மேளனத்தின் (ஏ.எவ்.சி) காங்கிரஸில் இத்தவணைக் கால வரையறையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இம்மாற்றத்தின் மூலம், தற்போது ஏ.எவ்.சியின் தலைவராக பதவி வகிக்கும் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீபா 2027 ஆம் ஆண்டு மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட முடியும். பஹ்ரெய்ன் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீபா தற்போது 3 ஆவது தடவையாக இப்பதவியை வகிக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையொன்றில், 'இம்மாற்றங்களாவை, எமது விளையாட்டின் எதிர்கால தலைமுறையினருக்காக, உயர் நெறிமுறைகளையும் சிறந்த நிர்வாக நடைமுறைகளையும் தொடர்ந்தும் பின்பற்றும் ஒரு முன்மாதிரி கூட்டுக்கூட்டுச் சம்மேளனமாக நாம் நீடிப்பதை உறுதிப்படுத்தும் எமது நோக்கத்துக்கான தெளிவான சமிக்ஞையாகும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.எவ்.சியின் தலைவராக 2002 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த, பீபா நிறைவேற்றுக்குழுவின் அப்போதைய அங்கத்தவரான கட்டாரைச் சேர்ந்த மொஹம்மத் பின் ஹம்மாமுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக 2011 ஆம் ஆண்டு பீபாவினால் ஆயுள்கால தடை விதிக்கப்பட்டது.
மொஹம்மத் பின் ஹம்மாம் தொடர்பான சர்ச்சைகளையடுத்தே, ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுச் சம்மேளனத்தன் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்களின் தவணைக் காலங்கள் மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM