சாதனை படைத்த இந்திய அணித் தலைவர் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுகிறார்!

18 May, 2024 | 01:42 PM
image

(நெவில் அன்தனி)

இரண்டு தசாப்தங்களாக இந்திய கால்பந்தாட்ட அணியில் விளையாடிவந்த அணித் தலைவரும் சாதனையாளருமான சுனில் சேத்ரி, சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச கால்பந்தாட்டத்தில் அதிக கோல்கள் போட்டவர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் இருப்பவரும் தெற்காசியாவில் முதலாம் இடத்தில் இருப்பவருமான சுனில் சேத்ரி, குவைத்துக்கு எதிராக ஜூன் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி முடிவில் ஓய்வுபெறவுள்ளார்.

இதனை 39 வயதான சுனில் சேத்ரி, வியாழனன்று அறிவித்தார்.

இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் இந்திய கால்பந்தாட்டத்தில் ஹீரோவாகக் கருதப்பட்டவர் பைச்சுங் பூட்டியா ஆவார். இலங்கைக்கு அவர் இந்திய அணியுடன் வருகை தந்தபோது அவரது ஆற்றலைக் காணவென்று நூற்றுக்கணக்கான இலங்கை இரசிகர்கள் சுகததாச அரங்கிற்கு வருகை தந்ததை யாரும் மறக்க முடியாது.

அதேபோன்றே சுனில் சேத்ரியும் இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கையிலும் பிரபல்யம் பெற்றவாராவார்.

பைச்சுங் பூட்டியாவுக்கு பின்னர் இந்தியாவின் கால்பந்தாட்ட ஹீரோவாக தன்னை உயர்த்திக்கொண்டவர் சுனில் சேத்ரி.

இந்திய அணியில் 2005ஆம் இடம்பிடித்த சுனில் சேத்ரி தனது அறிமுகப் போட்டியிலேயே கோல் புகுத்தி பெரும் பாராட்டைப் பெற்றிருந்தார்.

இதுவரை 150 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி 94 கோல்களைப் போட்டு, சமகால சர்வதேச வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸி ஆகியோருக்கு அடுத்ததாக அதிக கோல்கள் போட்டவர்கள் வரிசையில்மூன்றாம் இடத்தில் உள்ளார்.

அதிக கோல்கள் போட்டவர்களுக்கான அனைத்து வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ (போர்த்துக்கல் - 128 கோல்கள்), அலி டாய் (ஈரான் - 108 கோல்கள்), மெஸி (ஆர்ஜன்டீனா - 106 கோல்கள்) ஆகியோருக்கு அடுத்ததாக 4ஆம் இடத்தில் இருக்கிறார்.

தனது அதீத திறமையால் கால்பந்தாட்ட உலகில் தனக்கென தனியான இடம்பிடித்த சுனில் சேத்ரி திடீரென ஓய்வு பெறப்போவதாக அறிவித்தமை இந்திய கால்பந்தாட்ட இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'எமது நாடு அடுத்த 11ஆம்    இலக்க வீரரைக் காண்பதற்கான தருணம் தோன்றியுள்ளது' என தனது ஓய்வு குறித்து சேத்ரி உருக்கமாக அறிவித்தார்.

'நான் களைப்பை உணர்ந்ததால் இந்தத் தீர்மானத்தை எடுக்கவில்லை. ஆனால், இது எனது கடைசிப் போட்டியாக இருக்கவேண்டும் என எனது உள்ளுணர்வு உணர்த்தியபோது நான் அதைப் பற்றி நிறைய யோசனை செய்து கடைசியில் இந்த முடிவுக்கு வந்தேன்.

ஒளிநாடாவில் சேத்ரி குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை நாட்களில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடவேண்டும், சச்சின் போல் உயர்ந்த நிலையை அடைவேண்டும் என கனவு கண்டவர் சேத்ரி.

ஆனால், கிரிக்கெட் விளையாட்டிற்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு போதிய பணம் இல்லாததால் அவர் கால்பந்தாட்டத்தில் ஈடுபட தொடங்கினார்.

தாய்லாந்தில் 2001இல் நடைபெற்ற ஆசிய பாடசாலைகள் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் 17 வயது வீரராக இந்திய பாடசாலைகள் அணியில் இடம்பெற்ற சேத்ரி, நான்கு கோல்களைப் போட்டு அசத்தினார். அதுவே அவரது கால்பந்தாட்ட வாழ்க்கையில் முன்னேறுவதற்கான திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து இந்தியாவின் பிரபல்யமான கழகங்களில் ஒன்றான மோகன் பேகன் கழகத்தில் தொழில்முறை வீரரகா இணைந்த அவர் இந்திய இளையோர் அணியிலும் பின்னர் சிரேஷ்ட அணியிலும் முன்கள வீரராக விளையாடினார்.

இந்திய உள்ளூர் போட்டிகளில் மோகன் பேகன், ஈஸ்ட் பெங்கோல், சேர்ச்ஹில் ப்ரதர்ஸ், மும்பை சிட்டி, பெங்களூரு ஆகிய அணிகளுக்காக செத்ரி விளையாடியுள்ளார். 154 முதல்தர கால்பந்தாட்டப் போட்டிகளில் 61 கோல்களைப் போட்டுள்ளார்.

அவரது ஓய்வு இந்திய அணிக்கு பேரிழப்பாக இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வீரர்கள் ஓய்வு பெறுவது தவிர்க்க முடியாததாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் -...

2025-06-13 00:04:14
news-image

புனித மரியாள் பழைய மாணவர் கிரிக்கெட்...

2025-06-12 12:15:14
news-image

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பூரன்,...

2025-06-12 01:37:08
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2025-06-12 08:35:05
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழாவில் சந்த்ரா...

2025-06-11 18:30:20
news-image

ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் ஹேடன்,...

2025-06-11 17:50:17
news-image

மெராயா பழைய மாணவர் சங்க கிரிக்கெட்...

2025-06-11 16:58:44
news-image

அவுஸ்திரேலியா - தென் ஆபிரிக்கா மோதும்...

2025-06-11 15:01:15
news-image

தரவரிசையில் 166ஆம் இடத்திலுள்ள தாய்ப்பேயை அதிரவைத்து...

2025-06-10 20:04:22
news-image

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் T-10...

2025-06-10 18:04:39
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா: உயரிய...

2025-06-10 14:34:54
news-image

இலங்கை - சைனீஸ் தாய்ப்பே மோதும்...

2025-06-09 16:32:05