ஊடகங்களை சந்திக்காதது ஏன்? பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்

Published By: Vishnu

18 May, 2024 | 02:48 AM
image

''நடுநிலையுடன் பணியாற்ற வேண்டிய ஊடகங்கள் தற்போது இல்லை. அதனால் ஊடகவியலாளர்கள் சந்திப்பு எதையும் நடத்தவில்லை'' என பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்திருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்த பிரதமர் நரேந்திர மோடியிடம்.. ':ஆட்சிப் பொறுப்பேற்று பத்தாண்டு காலமும் ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தாது ஏன்?'' என்று வினா தொடுக்கப்பட்டது.

அதற்கு பிரதமர் பதிலளித்து பேசியதாவது...

'' பத்திரிக்கையாளர்கள் தங்களுடைய பார்வையையும், கொள்கைகளையும் தான் முன்னிறுத்துகிறார்கள்.

நான் நாடாளுமன்றத்துக்கு தான் பதிலளிக்க கடமைப்பட்டவன்.

தற்போது பத்திரிக்கையாளர்கள் அவரவர் சுய விருப்பத்துடன் அடையாளம் காணப்படுகிறார்கள். ஊடகங்கள் பக்க சார்பற்று நடுநிலையாக இல்லை.

நடுநிலையுடன் பணியாற்ற வேண்டிய ஊடகங்கள் இன்று அவ்வாறு செயல்படுவதில்லை. அதனால் தான் பத்திரிக்கையாளர் சந்திப்பு எதனையும் நடத்தவில்லை.

இப்போது மக்களுக்கு உங்களுடைய நம்பிக்கைகள் என்னவென்பது பற்றியும் தெரியும்.

முன்பெல்லாம் ஊடகம் முகமற்றவையாக இருந்தது. யார் எழுதுகிறார்கள்? அதன் கொள்கை என்ன? என யாரும் அதைப்பற்றி முன்னர் கவலைப்பட்டதில்லை. இன்று நிலைமை அவ்வாறில்லை.

அரசியலில் செயல்பாடுகள் பற்றி கவலைப்படாமல் ஊடகங்களை கையாள்வதை மையப்படுத்தி செயல்படுகின்ற புதிய அரசியல் கலாச்சாரம் உருவாகி இருக்கிறது.

இந்தப் பாதையில் செல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நானும் விஞ்ஞான் பவனில் ரிப்பன் வெட்டி புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியும். என்றாலும் ஜார்கண்டில் உள்ள ஒரு சிறிய மாவட்டத்தில் ஒரு சிறிய திட்டத்திற்காக பயணிக்கிறேன்.

புதியதொரு வேலை கலாச்சாரத்தை நான் கொண்டு வந்திருக்கிறேன். அதை ஒப்புக் கொள்வதா? வேண்டாமா? என்பதை ஊடகங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்''' என அவர் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கையில், '' பத்து ஆண்டுகளாக ஊடகங்களை சந்திக்காதது குறித்து பேசாத பிரதமர்... தற்போது ஊடகங்களை சந்தித்து பேசுகிறார் என்றால்.. தேர்தல் வெற்றி  குறித்து அவரிடமும், அவரது கட்சியினரிடமும் உள்ள நம்பிக்கையின்மையை தான் வெளிப்படுத்துகிறது'' என குறிப்பிடுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில்...

2024-06-17 16:46:58
news-image

ஜப்பானில் பரவி வரும் ஆபத்தான பற்றீரியா...

2024-06-17 16:20:17
news-image

மேற்கு வங்கம் | கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ்...

2024-06-17 14:09:25
news-image

மின்னணு இயந்திரங்கள் எல்லாம் கருப்பு பெட்டிகள்...

2024-06-17 14:04:34
news-image

மனச்சோர்வை - சலிப்பை ஏற்படுத்தும்- இடைவிடாத...

2024-06-17 12:24:32
news-image

மேற்கு வங்கம் | பயணிகள் ரயில்...

2024-06-17 12:14:14
news-image

கடும் வெப்பம் - ஜோர்தானை சேர்ந்த...

2024-06-17 11:30:53
news-image

சீக்கிய பிரிவினைவாதியை கொலை செய்ய திட்டமிட்ட...

2024-06-17 10:40:59
news-image

மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11...

2024-06-17 10:25:15
news-image

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த 'தமிழ்ப்...

2024-06-15 15:57:04
news-image

அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள்...

2024-06-15 12:30:58
news-image

ரஷ்யா - உக்ரைன் மீதான யுத்தத்தை...

2024-06-15 13:22:16