காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்திற்கு சர்வதேச விசாரணையே தீர்வு; சர்வதேசமன்னிப்புச்சபை பொதுச்செயலாளரிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து

Published By: Vishnu

18 May, 2024 | 01:28 AM
image

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேசபொறிமுறையில் தீர்வுபெற்றுத்தரவேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamardஇடம் வலியுறுத்திக்கூறியுள்ளனர்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès சல்லமர்ட் ற்கும் வடகிழக்கின் எட்டுமாவட்டங்களைச் சேர்ந்த வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க பிரதிநிதிகளுக்கு மிடையில் மே(17) வெள்ளிக்கிழமை  முல்லைத்தீவிலுள்ள தனியார் விடுதியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பின் பின்னர் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கப் பிரதிநிதிகள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச பொறிமுறையில் தமக்கான நீதியைப் பெற்றுத்தர வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் உள்நாட்டு ஆணைக்குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்ற உள்ளக விசாரணையில் தமக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளரிடம் எடுத்துக்கூறியுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்குச் சர்வதேச நீதிபதிகளின் கண்காணிப்பில், கலப்புநீதிமன்ற பொறிமுறையில் உள்ளகவிசாரணைமூம் நீதியைப் பெற்றுத்தருவது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை செயலாளர் யோசனையொன்றை முன்வைத்ததாகவும் இருப்பினும் தாம் அதை மறுத்ததுடன், சர்வதேச பொறிமுறையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி தேவை என்பதை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு தற்போது தமக்கு புலனாய்வாளர்களால் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தல்கள், தமது போராட்டத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற இடையூறுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும், தற்போது தமிழர் பகுதிகளில் இடம்பெறுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாகவும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பாதிப்பு நிலை தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard 18 ஆம் திகதி இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் அவர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிலைக்கேணி மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக...

2025-03-17 11:03:21
news-image

ஆறு மாத கர்ப்பிணிப் பெண் தீயில்...

2025-03-17 10:45:54
news-image

மன்னா கத்தியால் தாக்கப்பட்டு இரு சகோதரர்கள்...

2025-03-17 10:41:53
news-image

ஹுனுப்பிட்டியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-17 10:25:01
news-image

மொரட்டுவையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-03-17 10:00:01
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று...

2025-03-17 10:27:48
news-image

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு...

2025-03-17 09:54:53
news-image

கரையோர ரயில் சேவைகள் தாமதம் 

2025-03-17 09:18:26
news-image

மிதிகமவில் துப்பாக்கிச் சூடு 

2025-03-17 09:00:43
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; வேட்பு...

2025-03-17 09:10:34
news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21
news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05