(நெவில் அன்தனி)
இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமை (17) நிறைவுக்கு வந்த மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கை 4ஆம் இடத்தைப் பெற்றது.
போட்டியை முன்னின்று நடத்திய பாகிஸ்தான் சம்பியன் பட்டத்தை சூடியது.
ஆறு நாடுகள் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியில் 3ஆம் இடத்தைத் தீர்மானிப்பதாக வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற போட்டியில் கிர்கிஸ்தானிடம் 1 - 3 என்ற செட்கள் அடிப்படையில் தோல்வி அடைந்த இலங்கை 4ஆம் இடத்தைப் பெற்றது.
கிர்கிஸ்தானிடம் முதல் 2 செட்களில் முறையே 20 - 25, 17 - 25 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்த இலங்கை 3ஆவது செட்டில் பதிலடி கொடுத்து 25 - 20 என வெற்றி பெற்றது.
ஆனால், அடுத்த செட்டில் இலங்கையின் கடும் சவாலுக்கு மத்தியில் 25 - 23 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்தது.
இந்த சுற்றுப் போட்டியில் லீக் சுற்றில் கிர்கிஸ்தான். பாகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்த போதிலும் ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய அணிகளை இலங்கை வெற்றிகொண்டிருந்தது.
இப் போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் துர்க்மேனிஸ்தானை 3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிகொண்டு பாகிஸ்தான் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்பியனானது.
இறுதிப் போட்டியில் முதல் இரண்டு செட்களில் 25 - 21, 25 - 19 என்ற புள்ளிகள் கணக்கில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
3ஆவது செட்டை 25 - 20 என துர்க்மேனிஸ்தான் தனதாக்கியது.
ஆனால், 4ஆவது செட்டில் மீண்டும் திறமையாக விளையாடிய பாகிஸ்தான் 25 - 14 என வெற்றி பெற்று சம்பியனானது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM