எம்மில் சிலர் மேம்பட்ட பொருளாதார நிலையிலிருந்து திடீரென பொருளாதார பற்றாக்குறை உள்ளவராக மாற்றம் பெற்று விடுவார். பொருளாதார குறைவு நிலை .. அவர்களுடைய நாளாந்த நடவடிக்கைகளிலும், பேச்சுகளிலும் வெளிபடத் தொடங்கும். அவர்களை அணுகி ஏன் இந்த மாற்றம்? என கேட்டால், 'அதை சொன்னால் உனக்கு புரியாது. உனக்கு புரியும் அளவிற்கு எனக்கு சொல்லத் தெரியாது ஏனெனில் என்னுடைய கஷ்டம் விவரிக்க முடியாதது' என புலம்புவர். வேறு சிலர் இது தொடர்பாக ஜோதிடர்களை அணுகி அவர்கள் சொல்லும் பரிகாரங்களை எல்லாம் செய்து விட்டேன் ஆனால் என் கஷ்டம் மட்டும் தீரவில்லை என்றும் புலம்புவர். ஆனால் இத்தகைய நிலையில் உள்ளவர்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிய கல் உப்பு தீப வழிபாட்டை பரிகாரமாக முன்மொழிந்திருக்கிறார்கள்.
இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள் : கல் உப்பு ஒரு கிலோ, அகல் விளக்கு, பசு நெய், தாமரைத் தண்டு திரி, உங்களுடைய குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் உருவப்படங்கள்.
உங்களுடைய ஜென்ம நட்சத்திரத்திலிருந்து தார பலன் அளிக்கும் நட்சத்திரத்தை குடும்ப ஜோதிடரின் வழிகாட்டுதல் மூலம் அறிந்து கொண்டு, அந்த நட்சத்திர நாளில் காலையில் எழுந்ததும் நீராடி உங்களது பூஜை அறையில் இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்தின் உருவப்படத்தை வைத்து விட்டு, அதற்கு முன்னால் உங்களிடம் இருக்கும் கல் உப்பை கொட்டி அதனை கோபுரமாக வடிவமைத்துக் கொள்ளுங்கள். அந்த கோபுரத்தின் உச்சியில் அகல் விளக்கு வைப்பதற்கு வசதியாக சமப்படுத்திக் கொண்டு அதில் மஞ்சள் தூளால் அலங்கரிக்கப்பட்ட அகல் விளக்கை வைத்து, அதில் பசு நெய்யை ஊற்றி, திரியை ஏற்றி விளக்கேற்றி வழிபடத் தொடங்குங்கள். இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக நாற்பத்தெட்டு நாட்களுக்கு மேற்கொள்ளுங்கள். அந்த தருணத்தில் உங்களுடைய குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் முன் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்ற கோரிக்கையை சமர்ப்பணம் செய்யுங்கள். நாற்பத்தெட்டு நாட்களுக்குப் பிறகு உங்களது கஷ்டங்களுக்கான விடிவு காலம் பிறக்கும். சிலருக்கு அவர்களுடைய கஷ்டங்கள் விலகுவதற்கான தீர்வுகள் கிடைக்கும். வேறு சிலருக்கு அவர்களுடைய கஷ்டங்களிலிருந்து விடுபடுவதற்கான பாதை புலப்படும்.
உடனே எம்மில் சிலர், 'சார் இந்த பரிகாரத்தை எங்களால் தொடர்ச்சியாக நாற்பத்தெட்டு நாட்கள் மேற்கொள்ள இயலவில்லை. நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என கேட்பர். இதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரே ஒரு விடயத்தை தான் முன்னிறுத்துகிறார்கள். உங்களுக்கு பிராப்தம் இருந்தால் தான் இந்த பரிகாரத்தை மேற்கொள்ள இயலும். இந்தப் பிராப்தத்தை இந்த பிறவிலேயே கிடைக்க வேண்டும் என்று விரும்பினால்.. இதற்கு விநாயகரை திங்கட்கிழமைகளில் காலையில் வணங்கி அவருக்கு சிதறு தேங்காய் ஒன்றை உடைத்து எம்முடைய கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்காக கல் உப்பு தீப பரிகாரத்தை மேற்கொள்ளவிருக்கிறேன். இதற்கு எந்த தடையும் ஏற்படாமல் இந்த பரிகாரத்தை முழுமையாக செய்ய, அருளாசித் தாருங்கள் என அவரிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். உங்களது வேண்டுகோளை விநாயகப் பெருமான் ஏற்றுக்கொண்டு உங்களுக்கு அருள் ஆசி வழங்குவார். அதன் பிறகு மீண்டும் கல் உப்பு தீப பரிகாரத்தை மேற்கொண்டால்... எந்தவித தடையும் இன்றி இதனை நிறைவேற்றி, உங்களுடைய கஷ்டங்களிலிருந்து நீங்கள் எளிதாக விடுபடலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM