இந்தியாவில் குற்றாலத்தில் திடீர் வெள்ளம் ; அடித்து செல்லப்பட்ட இளைஞன்

Published By: Digital Desk 3

17 May, 2024 | 04:34 PM
image

இந்தியாவில் தமிழ் நாட்டில் பழைய குற்றாலம் நீர்வீழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 17 வயது இளைஞன் காணாமல் போயுள்ளார்.

தமிழகத்தில் 19,20 ஆகிய திகதிகளில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்காசியில் பெய்து வரும் மழை காரணமாக பழைய குற்றாலம் நீர்வீழ்ச்சியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞன்  அடித்துச் செல்லப்பட்டுள்ளார். தற்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அந்த இளைஞனைத் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இளைஞன் தனது குடும்பத்தாருடன் குளித்து கொண்டு இருந்த சமயத்தில் திடீரென வெள்ளம் ஏற்பட்ட நிலையில் அவர் அடித்து செல்லப்பட்டார்.

பல சுற்றுலா பயணிகள் அந்த பகுதியில் குளித்து கொண்டு இருந்த நிலையில், திடீரென வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக மக்கள் பலரும் அலறி அடித்து ஓடினார்கள்.  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடிலெய்டில் வணிக வளாகத்தில் பதற்றம் -...

2024-06-23 13:14:36
news-image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்; சென்னையில் பதுங்கி இருந்த...

2024-06-23 12:33:26
news-image

தாய்வானின் சுதந்திரத்துக்காக முயற்சி செய்பவர்களுக்கு மரண...

2024-06-23 12:03:55
news-image

காயமடைந்த பாலஸ்தீனியரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டிப்போட்டு...

2024-06-23 10:11:14
news-image

முதல் தாக்குதல் காரணமாக அச்சமடைந்து கதறியவர்களை...

2024-06-22 12:08:53
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 3...

2024-06-22 10:40:26
news-image

கடும் வெப்பத்தால் 4 பால்கன் நாடுகளில்...

2024-06-22 10:55:22
news-image

மதநிந்தனை குற்றச்சாட்டில் சுற்றுலாப்பயணி பொதுமக்களால் தாக்கப்பட்டு...

2024-06-21 22:09:05
news-image

வடகொரியாவிற்கு ரஸ்யாவின் ஆயுதங்கள் - அமெரிக்கா...

2024-06-21 15:24:57
news-image

ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்க முடியாது...

2024-06-21 13:18:28
news-image

இந்திய - இலங்கை சர்வதேச கடல்...

2024-06-21 14:09:55
news-image

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின்...

2024-06-21 10:40:21