இலங்கையில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்த நோயாளர்கள்! : இன்று உலக உயர் இரத்த அழுத்த தினம்

17 May, 2024 | 03:51 PM
image

- பிரதீபா 

லக சுகாதார அமைப்பு  2006ஆம் ஆண்டு முதல் மே 17ஆம் திகதியை  உலக உயர் இரத்த அழுத்த தினமாக அனுசரித்து வருகிறது. உயர் இரத்த அழுத்தத்தின் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்த தினம் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் என்பது உலகையே அச்சுறுத்தும் நோயாக உள்ளது. உணவுப் பழக்கவழக்க மாற்றத்தின் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், உயிருக்கே அச்சுறுத்தலாகிவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். உயர் இரத்த அழுத்தம் குறித்தும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும்  மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, இரத்த அழுத்தம் மரபு வழியாக வரலாம் என்றும் சிறு வயதில் இரத்த அழுத்தம் வர முக்கிய காரணங்களாக இருப்பவை சிறுநீரகக் கோளாறு, உடல் பருமன் அதிகமாக இருத்தல், முக்கியமாக மன அழுத்தம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு விசேட வைத்திய நிபுணர், செரின் பாலசிங்கம் கூறுகையில், 2021ஆம் ஆண்டு நாடு தழுவிய நிலையில் எடுத்த ஆய்வில் 18 தொடக்கம் 69 வயதுக்குட்பட்டவர்களில் 35 வீதமானோர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 வீதத்தால் அதிகரித்துள்ளது. எதிர்வரும் காலத்தில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நாளாந்த அளவாக நிர்ணயிக்கப்பட்ட    அளவை விட அதிகளவில் மக்கள் உப்பை பயன்படுத்துகின்றனர். நபர் ஒருவர் 14.2 கிராம் உப்பை பயன்படுத்துகின்றார். எனவே 35 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்வது அவசியம்.

மேலும், நீரிழிவு நோயாளர்கள் உயர் இரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார்.  

இரத்த அழுத்தத்தை அளவிட உகந்த நேரம் 

காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் இரத்த அழுத்த பரிசோதனைதான் மிகத் துல்லிய அளவை காட்டும். கடல் அலை போன்று காலையிலிருந்து மாலை வரை இரத்த அழுத்தம் மாறுபட்டுக்கொண்டே வரும். முக்கியமாக, நம் உடலில் உள்ள உப்புச்சத்து காரணமாக இரத்த அழுத்தம் மாறுபடும். நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் சுமா‌ர் 14.2 கிராம்    உப்பு அல்லது அதற்கும் அதிகமான அளவை  சேர்த்துக்கொள்கிறோம். அது தவறானதாகும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், பொதுவாக இன்று பத்தில் மூவருக்கு இரத்த அழுத்தமும், 5இல் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரத்த அழுத்தம் இருப்பவர்கள் உடல் எடையைக் குறைப்பது மிக அவசியம். அதேவேளை, பழங்கள், காய்கறிகள், கீரைகள்,  தானியங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலை, மாலை இரு வேளைகளிலும் யோகா, உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. மனதுக்குப் பிடித்த பாடல்கள் கேட்பது சிறந்தது. இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டால் வாழ்நாள் முழுவதும், தினந்தோறும் இரத்த அழுத்த மாத்திரை எடுத்துக்கொள்வது அவசியம். இரத்த அழுத்தத்தால் சிறுநீரகம், கண், இதயம், நரம்பு மண்டலம் என்பன பாதிக்கப்படும். 

மேலும், திடீர் இதய அடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். எனவே இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக்கொண்டு உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

மேலும், உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்புக்கும் இரத்த அழுத்தத்துக்கும் நேரடி தொடர்புண்டு. 

பேக்கரி பொருள்கள், நொறுக்கு தின்பண்டங்கள்   மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் ஊறுகாய் போன்ற உணவுப் பொருள்கள் இரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணம். முடிந்தளவு நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைத்து உடல் நலம் பேண வேண்டும். வேலைப்பளு, கோபம், எரிச்சல், மன அழுத்தம், புகைப்பழக்கம் போன்றவையும் இரத்த அழுத்த மாறுபாட்டுக்கான காரணங்கள் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சாதாரண இரத்த அழுத்த எண்கள் எவை?

ஒரு சாதாரண இரத்த அழுத்த அளவு 120/80 mmHg என்று அளவிடப்படுகிறது.  ஒவ்வொருவரும் இரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான வரம்பில் வைத்திருக்க  வேண்டியது அவசியமானது.

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இயல்பை விட அதிகமாக இருக்கும் இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. இது 140/90 mmHg என்று அளவிடப்படுகிறது.  உயர் இரத்த அழுத்தத்துக்கு பொதுவாக எந்த எச்சரிக்கை அறிகுறிகளும் இல்லை. மேலும் பலருக்கு அது இருப்பதாகத் தெரியாது. எனவே, இரத்த அழுத்தத்தை அளவிடுவதே ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளதா என்பதை அறிய ஒரே வழியாகும்.

உயர் இரத்த அழுத்தம் எதனால் ஏற்படுகிறது?

உயர் இரத்த அழுத்தம் பொதுவாக காலப்போக்கில் உருவாகிறது. போதுமான வழக்கமான உடல் செயல்பாடு இல்லாதது போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக இது நிகழலாம்.

நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற சில சுகாதார நிலைகளும் உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம். கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தம் கூட ஏற்படலாம்.  

பக்கவாதம் மற்றும் மூளை பிரச்சினைகள்

உயர் இரத்த அழுத்தம் மூளைக்கு இரத்தம் மற்றும் ஒட்சிசனை வழங்கும் இரத்தக்  குழாய்களை வெடிக்கச் செய்யலாம் அல்லது தடுக்கலாம். இதனால் பக்கவாதம் ஏற்படலாம். மூளை கலன்களுக்கு போதுமான ஒட்சிசன்  கிடைக்காததால் பக்கவாதம் ஏற்படுகிறது.   பக்கவாதம் பேச்சு, இயக்கம் மற்றும் பிற அடிப்படை செயல்பாடுகள், கடுமையான குறைபாடுகளை ஏற்படுத்தும். இறப்புக்கு கூட  வழிவகுக்கும் என்றும் வைத்தியர்கள் கூறுகின்றனர். 

மன அழுத்தத்தை நிர்வகித்தல்

மேலும், உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான மற்றும் தடுப்பதற்கான வழிகளைப் பற்றி பார்த்தால், சீரான வாழ்க்கை முறை அவசியமாகும். உயர் இரத்த அழுத்தம் உள்ள சிலர் தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்து, மாத்திரைகளை   எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் தமக்கு  உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக நினைத்தாலோ அல்லது உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக மருத்துவர்களால் கூறப்பட்டாலோ,  அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வழி செய்ய வேண்டும். 

அதாவது தவறாது குறிப்பிட்ட தினத்தில் வைத்தியரை நாடி சிகிச்சை பெறுவது  அவசியம். இல்லையேல், அது ஒருவரை அமைதியாக கொன்றுவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே உலக உயர் இரத்த அழுத்த தினமான இன்று நாம் நமது உடலை ஆரோக்கியமாக பேண திடசங்கற்பம் பூணுவோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அசாதாரணமான கண் துடிப்பு பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-20 19:53:31
news-image

முதுகெலும்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-06-19 20:19:16
news-image

பித்தப்பை கற்களை அகற்றும் நவீன சிகிச்சை

2024-06-18 17:32:01
news-image

தோள்பட்டை சவ்வு அழுத்தப் பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-17 15:50:29
news-image

புற்றுநோய் கட்டிகளை லேப்ரோஸ்கோப்பிக் சத்திர சிகிச்சை...

2024-06-15 13:45:29
news-image

தண்டுவடத்தில் ஏற்படும் காசநோய் பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-14 16:56:58
news-image

அசாதாரண கருப்பை ரத்தப்போக்கு பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 13:23:09
news-image

இடைநிலை நுரையீரல் தொற்று பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 09:12:17
news-image

மூளை கட்டியின் வகைகளும், காரணங்களும்...!?

2024-06-10 17:28:32
news-image

நீரிழிவு நோயால் நரம்பு மண்டல பாதிப்பு...

2024-06-08 16:19:56
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை ரத்த...

2024-06-07 18:48:18
news-image

குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதய குறைபாடு ஏற்படுவதை...

2024-06-04 14:04:02