பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் 3 பேர் கைது

17 May, 2024 | 05:08 PM
image

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட விசேட 20 குழுவினரால் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணியதாக கூறப்படும் மேலும் 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்...

2024-06-12 20:37:33
news-image

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த...

2024-06-12 20:33:05
news-image

4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியை...

2024-06-12 20:19:01
news-image

கிரிந்திவெலயில் கோடாவுடன் ஒருவர் கைது

2024-06-12 20:14:05
news-image

தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை...

2024-06-12 19:40:39
news-image

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு...

2024-06-12 19:11:58
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-06-12 19:42:31
news-image

போதைப்பொருட்களுடன் 13 பெண்கள் உட்பட 813...

2024-06-12 20:13:13
news-image

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

2024-06-12 17:24:17
news-image

களுத்துறையில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட கோடாவுடன் ஒருவர்...

2024-06-12 20:28:55
news-image

மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி...

2024-06-12 18:19:27
news-image

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...

2024-06-12 17:09:49