லங்கா பிறீமியர் லீக் வீரர்கள் ஏலத்திற்கான முழு ஏலத் தொகை 75.2 கோடி ரூபா!

17 May, 2024 | 03:22 PM
image

(நெவில் அன்தனி)

லங்கா பிறீமியர் லீக் 5ஆவது அத்தியாயத்தில் வீரர்களுக்கான முழு  ஏல  விலை 75 கோடியே 25 இலட்சத்து 10,750 ரூபாவாகும் (25 இலட்சம் அமெ. டொலர்கள்).

இப் போட்டியில் பங்குபற்றும் ஐந்து தொழில்முறை அணிகளின் உரிமையாளர்களுக்கு  தலா 15 கோடி ரூபாவை  (5 இலட்சம் அமெ. டொலர்கள்). ஏலத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று காலை நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக் வீரர்களுக்கான ஏலம் தொடர்பான ஊடக சந்திப்பின்போது இத்தகவலை போட்டி பணிப்பாளர் சமன்த  தொடன்வெல   தெரிவித்தார்.

கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ், தம்புள்ள தண்டர்ஸ், கோல் மாவல்ஸ், லைக்கா ஜெவ்னா கிங்ஸ் ஆகிய அணிகளும் கண்டி அணி ஒன்றும் இம்முறை லங்கா பிறீமியர் லீக்கில் விளையாடவுள்ளன.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களுக்கு கட்டுப்படத் தவறியதால் நடப்பு சம்பியன் கண்டி (பிலவ்) அணியின் உரிமையாளர் நீக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அணியைப் பொறுப்பேற்பதற்கு 3 புதிய உரிமையாளர்கள் முன்வந்துள்ளதாகவும் சமன்த  தொடன்வெல  குறிப்பிட்டார்.

கண்டி அணிக்கான உரிமையாளர் உறுதிசெய்யப்பட்ட பின்னர் கண்டி அணியின் பெயர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மார்ட்டின், கப்டில், அலெக்ஸ் கேரி, அலெக்ஸ் ஹேல்ஸ், ரஹ்மானுல்லா குர்பாஸ், தமிம் இக்பால், ஜிம்மி நீஷாம், முஷ்பிக்குர் ரஹிம், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ரைலி ரூசோவ், ஷாய் ஹோப், டிம் சௌதீ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்களும் இலங்கையின் சமகால மற்றும் முன்னாள் தேசிய வீரர்களும் ஏலத்தில் வாங்கப்படவுள்ளனர்.

வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகலிலிருந்து நடைபெறும்.

ஒவ்வொரு அணியும் 6 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆனால் அந்த வீரர்களுக்கான விலையைக் கழித்து மீதமுள்ள தொகையைக் கொண்டே மற்றைய வீரர்களை ஏலத்தில் வாங்க முடிவும்.

வழமைபோல் இம்முறையும் துடுப்பாட்ட வீரர்கள், சகலதுறை வீரர்கள், விக்கெட் காப்பாளர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள், சுழல்பந்துவீச்சாளர்கள் என்ற வரிசையில் ஏலம் நடைபெறும்.

இது இவ்வாறிருக்கு விளையாடும் அணியில் 23 வயதுக்குட்பட்ட வீரர் ஒருவர் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை நடத்துவதன் மூலம் சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்படுவதுடன் இலட்சக்கணக்கான டொலர்கள் வருவாயாக கிடைக்கும் எனவும் வெளிநாட்டு வீரர்களுக்கு அணி உரிமையாளர்களே சம்பளம் வழங்குவதால் இலங்கைக்கு நட்டம் ஏற்படாது எனவும் சமன்த தொடன்வெல தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதில் செயலாளர் கிருஷான்த கப்புகொட்டுவ, பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, ஐபிஜ குறூப்பின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் மோகன் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடா - பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா...

2026-06-13 10:49:52
news-image

வியட்-ஹொஜ் குவித்த சதத்தின் உதவியுடன் மகளிர்...

2026-06-13 09:26:45
news-image

ஆசியா  றக்பி எமிரேட்ஸ் ஆடவர் சம்பியன்ஷிப்...

2026-06-12 20:05:36
news-image

ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-06-12 17:32:28
news-image

இறக்குவானையின் முன்னணி கிரிக்கெட் அணியாக உருவெடுத்துள்ள...

2026-06-12 16:55:45
news-image

பத்தாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக்...

2026-06-12 16:53:18
news-image

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம்...

2026-06-12 15:58:24
news-image

செக் குடியரசை அதிரவைத்து 2 -...

2026-06-12 14:03:31
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ரி20இல்...

2026-06-12 11:08:20
news-image

பீபா 2026 உலகக் கிண்ண ஆரம்பப்...

2026-06-12 09:40:54
news-image

1998இல் பங்குபற்றும் அணிகளின்  எண்ணிக்கை 32...

2026-06-11 21:57:44
news-image

பீபா உலகக் கிண்ண வரலாறு :...

2026-06-11 21:48:15