இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் நோபாளத்தின் லும்பினியிலிருந்து கொழும்பு வரை மோட்டார் சைக்கிள் பயணம் செய்யவுள்ளனர்.
இதயபூர்வமான மோட்டார் சைக்கிள் பயணம் மே 23 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 16 ஆம் திகதி கொழும்பில் நிறைவடையும்.
மோட்டார் சைக்கிள் பயணத்தை புத்த ஜெயந்தி அன்று கௌதம புத்தர் பிறந்த இடமான லும்பினியில் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் கொடியசைத்து ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
இதனை இதயபூர்வமான புத்தர் சுற்றுப்பயணத்தின் (Heartfulness Buddha Circuit Ride (HBCR)) இணை ஒருங்கிணைப்பாளர் ராகுல் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
நேபாளம் மற்றும் இந்திய அரசாங்கங்களுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பயணத்தில் மூன்று நாடுகளைச் சேர்ந்த 15 இராணுவ வீரர்கள் கௌதம புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் ஊடாக பயணம் செய்யவுள்ளார்கள்.
அத்துடன், இந்த சுற்றுப்பயணம் ஏழு மாநிலங்களை உள்ளடக்கியது.
சென்னையில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறைக்கு கடல் வழியாக இந்திய கடற்படைக் கப்பலில் வருகை தந்து, அங்கிருந்து தலைநகர் கொழும்புக்கு மோட்டார் சைக்கிளில் பயணிப்பார்கள்.
கொழும்பில் ஜூன் மாதம் 16 திகதி நடைபெறும் பயணத்தின் நிறைவு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கவுள்ளார்.
இவேளையில், பிரதமர் தினேஷ் குணவர்தன காங்கேசன்துறையில் மோட்டார் சைக்கிள் பயண வீரர்களை வரவேற்கவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM