வாழைச்சேனை கும்புறுமூலையில் நாய்கள் பராமரிப்பு நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நேற்று வியாழக்கிழமை (16) திறந்துவைக்கப்பட்டது.
கோறளைப்பற்று பிரதேசத்தில் பராமரிப்பின்றியும் கவனிப்பாரற்றும் பொது இடங்களில் நடமாடும் கட்டாக்காலி நாய்களை பராமரிப்பதற்கென இந்த பராமரிப்பு நிலையம் ஆளுநரின் ஆலோசனையின் கீழ் கிழக்கில் முதல் நிலையமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய செந்தில் தொண்டமான், எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலும் இவ்வாறான பராமரிப்பு நிலையங்கள் திறந்துவைக்கப்பட்டு, தெரு நாய்களின் தொல்லையிலிருந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நோயினால் பாதி நாய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்துதல், காயங்களுக்கு மருந்து கட்டுதல், கருத்தடை போன்ற மருத்துவ சேவைகள் இடம்பெறவும் நாய்களை வளர்க்க விரும்புவோர் அவற்றை பெற்றுச் செல்வதற்கும் இந்த காப்பகம் திறந்துவைக்கப்பட்டது.
கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளரும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருமான என்.மணிவண்ணன் கௌரவ அதிதியாகவும் மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ் உட்பட வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி, கால்நடை வைத்திய அதிகாரி மற்றும் உள்ளூராட்சி திணைக்களத்தின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM