சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட தொலைபேசிகள், பென்ரைவ்களுடன் வர்த்தகர்கள் இருவர் கைது!

17 May, 2024 | 01:24 PM
image

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 12 மற்றும் கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 59 மற்றும் 24 வயதுடைய இரண்டு வர்த்தகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று (17) வெள்ளிக்கிழமை அதிகாலை 4.55 மணியளவில் துபாயிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் தங்களது பயணப்பொதிகளுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்படும் போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில், இவர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 1,083  கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200  பென்ரைவ்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட வர்த்தகர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"அரசியல் கைதிகள் இல்லை" என்ற பழைய...

2025-01-15 15:13:18
news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-01-15 15:08:00
news-image

சீன ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

2025-01-15 15:04:13
news-image

இந்தியாவின் 76 வது குடியரசு தினத்திற்கு...

2025-01-15 14:53:41
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர்...

2025-01-15 14:33:19
news-image

சிகிரியா இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக...

2025-01-15 14:25:36
news-image

தொடங்கொடை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் வெளியான...

2025-01-15 14:23:57
news-image

மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள்...

2025-01-15 13:41:27
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2025-01-15 12:52:44
news-image

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'வெலேசுதா' உட்பட...

2025-01-15 12:57:59
news-image

இலங்கையின் முன்னணி வயலின் இசைக் கலைஞர்...

2025-01-15 13:52:05
news-image

இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின்...

2025-01-15 12:30:02