நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து பொலிஸார் இருவரை தாக்கிய முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் அரச ஊழியர் உட்பட நான்கு சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்கக் கொழும்பு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளது .
கடந்த 14 ஆம் திகதி தாக்கப்பட்ட இரு பொலிஸார் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது நாரஹேன்பிட்டி பகுதியிலிருந்து அல்விட்டிகல மாவத்தை நோக்கி கார் ஒன்று அதிவேகமாகப் பயணித்துள்ளது.
காரில் பயணித்தவர்கள் விடுதியொன்றில் அருகில் காரை நிறுத்தி மது அருந்திவிட்டுக் கூச்சலிட்டதால், இந்த இரு பொலிஸாரும் காரை வீதியிலிருந்து அகற்றுமாறு அறிவித்த போது சந்தேக நபர்கள் வாகனத்திலிருந்து இறங்கிய இரு பொலிஸ் அதிகாரிகளையும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றொரு பொலிஸ் அதிகாரி நாரஹேன்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM