சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்தியாவிலிருந்து ஐந்து நதிகளிலிருந்து பெறப்பட்ட தீர்த்தம் மற்றும் கலசங்கள் உட்பட உற்சவ மூர்த்திகள் இன்று வெள்ளிக்கிழமை (17) காலை கொழும்பு மயூரபதி அம்மன் ஆலயத்திலிருந்து மாபெரும் ஆன்மிக ஊர்வலத்துக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் வைத்து கொண்டுசெல்லும் பவனி ஆரம்பமானது.
இந்த ஊர்வலம் ஆரம்பமாவதற்கு முன் கொழும்பு மயூரபதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினரும் சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய அரங்காவலருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள முக்கியஸ்தர்கள், கொழும்பு மயூரபதி அம்மன் ஆலய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலத்தில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஐந்து நதிகளிலிருந்து பெறப்பட்ட தீர்த்தம், கலசங்கள், உற்சவ மூர்த்திகள் இன்று மயூரபதி அம்மன் ஆலயத்திலிருந்து காலி வீதி, மெயின் வீதி, செட்டியார் வீதி, ஆமர் வீதி ஊடாக அவிசாவளை, யடியான்தோட்ட, கினிகத்தேன, ஹட்டன், கொட்டக்கலை, தலவாக்கலை, வட்டகொட, பூண்டுலோயா வழியாக இறம்பொடை ஆஞ்சநேயர் ஆலயத்தை சென்றடையும்.
அதனை தொடர்ந்து, நாளை 18ஆம் திகதி சனிக்கிழமை காலை இந்த ஊர்வலம் இறம்பொடை ஆலயத்திலிருந்து நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தை நோக்கி ஆரம்பமாகும்.
இந்த ஊர்வலத்தை நுவரெலியா கண்டி வீதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் ஆலயத்துக்கு முன்னாலிருந்து நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய நிர்வாக சபையினரின் வழிகாட்டலில் அங்கிருந்து நடைபவனியாக கண்டி வீதி, பழைய கடை வீதி, புதிய கடை வீதி, வெலிமடை வீதி, தர்மபால சந்தி வரை சென்று அங்கிருந்து வாகன ஊர்வலமாக வெலிமடை வீதியூடாக சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தை சென்றடையும்.
தொடர்ந்து, நாளை மறுதினம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வைபவத்தில் பிரமர் திணேஷ் குணவர்தன, வாழும் கலைப் பயிற்சியின் நிறுவுனர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உட்பட பலர் கலந்துகொள்வார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM