ஐஸ் போதைப்பொருள் மற்றும் யஸ் போதைப்பொருட்களை காரில் ஏற்றிச் சென்ற இரு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைதான இருவரும் தலங்கம, ஹினாட்டிகும்புர பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் கொழும்பு 08 பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றொரு சந்தேக நபர் பிலியந்தலை பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
அவர்கள் பயணித்த காரில் 10 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் 80 மில்லிகிராம் யஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு குற்ற செயல்களை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM