1973
கொழும்பு பெளத்தலோக மாவத்தையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH) 1973ஆம் ஆண்டு மே 17 அன்று, இதே திகதியில் திறந்துவைக்கப்பட்டது.
அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அழைப்பை ஏற்று, சீன பிரதமர் சூ என் லாய் இலங்கைக்கு வருகை தந்து மண்டபத்தை திறந்துவைப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், வைபவ நாளில் சீன பிரதமருக்கு பதிலாக, அவரது விசேட பிரதிநிதியான சீன உப தலைவர் மார்ஷல் சூ சியாங் ஷென் பண்டாரநாயக்க மண்டபத்தை திறந்துவைத்தார்.
சீன அரசாங்கத்தினால் சீன தொழில்நுட்ப உதவியாளர்கள், சீன தொழிலாளர்கள், இலங்கை பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் பண்டாரநாயக்க மண்டபத்தை கட்டியதாக கூறப்படுகிறது.
இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்த சீன துணைத் தலைவரை முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க வரவேற்பதையும், மண்டபம் திறப்பு மற்றும் பிரதமரின் உரை உள்ளிட்ட பல்வேறு விடயங்களோடு 1973 மே 9, 17, 18 ஆகிய திகதிகளில் வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கங்களை இங்கே காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM