நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொதுக்கொள்கை அரசுக்கு இல்லையா என ஜனாதிபதியிடம் மனோ கேள்வி !

Published By: Digital Desk 7

17 May, 2024 | 03:30 PM
image

நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொதுக் கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேள்வி எழுப்பியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு,   இலங்கை  பொலிஸாரினால் தனிப்பட்ட இல்லம் ஒன்றிற்கு  தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி நிற்கும் தமிழ் பெண்களை கதற வைத்து,  இழுத்து சென்று கைது செய்துள்ளதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.

புலிகள் இயக்கம் சட்டப்படி தடை செய்யப்பட்டது எனவும் அது சட்ட பிரச்சினை என்பதோடு அந்த இயக்கத்தின் சின்னங்கள் எதுவும் இல்லாமல் தங்கள் வீட்டில் கஞ்சி காய்ச்சி குடித்த மக்களை பொலிஸார் ஏன்  தேடி சென்று கைது செய்யவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவித்துள்ளார்.

தொலைபேசி உரையாடல் குறித்து மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில், 

கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் அதிகாரிகளுடன்  முரண்பட்டுள்ளமையினால் கைது செய்யப்பட்டதாகவும் இந்த விடயம் தொடர்பாக  பிணை கோரிக்கையை எதிர்க்க வேண்டாம் என  பொலிஸாருக்கு  சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் கூறி விட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டமை தொடர்பில் இவ்வாறான பல கேள்விகளை எழுப்பியபோது “அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்” என்று மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனக்கு  பதில் கூறினார்.

“நினைவேந்தல் தொடர்பில் பொதுக் கொள்கை இல்லையா ? அறிவிக்க முடியாதா?” என்ற எனது  கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் அளிக்கவில்லை, என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியமின்றி நாட்டை கட்டியெழுப்புவோம் என்று...

2024-06-15 18:12:22
news-image

தேர்தல் கால பிரச்சாரமாக 13ஆவது திருத்தத்தை...

2024-06-15 18:29:03
news-image

இலஞ்சம் பெற்ற நீர்ப்பாசன திணைக்கள எந்திரியும்...

2024-06-15 16:55:52
news-image

ருமேனியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக்...

2024-06-15 16:39:31
news-image

கிழக்கு மாகாணத்தின் அமைச்சுகளுக்கு ஆளுநரால் புதிய...

2024-06-15 16:56:44
news-image

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் 70 மாணவர்களின்...

2024-06-15 15:11:12
news-image

தலைமன்னார்- கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாகப்...

2024-06-15 15:43:02
news-image

அடுத்த வாரம் இலங்கை வருகிறார் இந்திய...

2024-06-15 15:18:37
news-image

10 ஆவது சர்வதேச யோகா தினத்தை...

2024-06-15 14:41:09
news-image

கண்டியில் சக மாணவனை கத்தியால் குத்திய...

2024-06-15 13:44:03
news-image

மயிலை வேட்டையாடி உண்ட வெளிநாட்டவர்களும் வேடுவ...

2024-06-15 14:40:39
news-image

இன்றைய மரக்கறி விலைகள்

2024-06-15 13:15:00