கண்டி பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் வீடொன்றில் போலி நாணயத் தாள்கள் இருப்பதாகக் கூறி, அங்கிருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாகக் கூறும் சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 6 பேர் சந்தேகத்தின் பேரில் கண்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த வர்த்தகரின் வீட்டில் போலி நாணயத்தாள்கள் இருந்ததாக சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த வர்த்தகரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 103 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் வர்த்தகருக்கு சொந்தமானது என கூறப்படும் சுமார் 60 இலட்சம் ரூபா பணம் பொலிஸாரால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள கண்டி பொலிஸ் அவசர பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கடமை அனுமதி பெற்று உரிய இடத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் எனவும் தெரியவருகிறது.
இவர் குருநாகல் பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட ஆறு சந்தேக நபர்களும், குறித்த போலிப் பணம் வர்த்தகருக்கு தெரிந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து மேலும் தெரியவருவதாவது:
குற்றச்சாட்டை மறுத்துள்ள வர்த்தகர், காவலில் உள்ள இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் போலி நாணயத்தாள்களுடன் தனது வீட்டிற்கு வந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர், தனக்குச் சொந்தமான வீட்டை 6 கோடி ரூபாவிற்கு விற்றதாகவும், 85 இலட்சம் ரூபா தன்னிடம் இருந்ததாகவும் தொழிலதிபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (15) மாலை 6.00 மணியளவில் தமது வீட்டிற்கு வந்தவர்கள், வீட்டில் போலி நாணயத்தாள்கள் இருப்பதாகத் தமக்கு கிடைத்த தகவலையடுத்து வீட்டைச் சோதனையிட்டதாகவும், தங்களிடம் இருந்த போலி நாணயத் தாள்களை மாற்ற முயற்சித்ததாகவும் அதனை அனுமதிக்காததினால் தகராறு ஏற்பட்டது என்று கூறினார்.
சந்தேக நபர்கள் குறித்த வீட்டின் CCTV கமரா அமைப்பின் தரவுப் பதிவுப் பகுதியை அகற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களால் தாக்கப்பட்ட வர்த்தகரை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்து அறிக்கையை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றன. சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM